என் அப்பாவின் இறப்பிற்கு அஞ்சலி செய்யும் விதமாக நான் இதனை செய்வேன் – சபதம் செய்த சிராஜ்

Siraj
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் வீரர் முகமது சிராஜ் இந்திய டெஸ்ட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் அவர் இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அவரது தந்தை ஹைதராபாத்தில் காலமடைந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்ட சிராஜ் இந்த செய்தியைக் கேட்டு இடிந்து போனார். மேலும் பிசிசிஐ அவருக்கு இந்தியா திரும்ப வாய்ப்பு வழங்கியும் அவர் தான் இந்திய அணியோடு இருக்க விரும்புவதாக கூறி விட்டார் என்று பிசிசிஐ ஏற்கனவே ஒரு தகவலை வெளியிட்டது.

மேலும் அதை தொடர்ந்து துக்கத்திலிருந் சிராஜை அணி கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் தேற்றியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்து அந்த வெற்றியை தனது அப்பாவிற்கு அஞ்சலியாக செலுத்துவேன் என சிராஜ் சபதம் ஏற்று உள்ளார் என்று அவரது சகோதரர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Siraj 1

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய தொடருக்கு அவன் தேர்வாகி இருந்தபோது அப்பாவுக்கு அதனை போன் மூலம் சொல்லியிருந்தான். அப்பாவின் இழப்பை அறிந்ததும் அவர் இடிந்து போய் உள்ளார். மேலும் இந்த துயரமான சம்பவத்திற்கு பிறகு நாங்கள் எப்போதெல்லாம் போன் செய்தாலும் அழுது கொண்டே இருக்கிறார். எங்களுக்கும் வலி இருந்தாலும் அவர் நாட்டிற்காக விளையாட சென்றுள்ளார்.

Siraj

ஆண்டவன் தான் அவருக்கு சக்தியை கொடுக்க வேண்டும். கடல் கடந்து உள்ள அவருக்கு நாங்கள் போன் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த வெற்றியை நிச்சயம் எங்கள் தந்தைக்கு அவர் அர்பணிப்பார் என்று சிராஜின் சகோதரர் இஸ்மாயில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement