இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடிலெய்ட்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியும், மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. தற்போது மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரை கைப்பற்றுவதற்கு இரு அணியும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்தில் விக்கெட் இழந்தார். இதன் பிறகு புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் விளாசினர். கடந்த நான்கு இன்னிஸ்சில் சொதப்பிய ஸ்மித் தற்போது விக்கெட் இழக்காமல் நிதானமாக விளையாடி வருகிறார்.
இதன்மூலம் ஆஸதிரேலிய அணி முதல் நாள் நேரவில் 2 விக்கெட் இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன்பு இரு அணி சார்பாக தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டது. இந்திய தேசிய கீதம் போட்டபோது இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கண் கலங்கினார். அப்போது அவர் தனது கைகளின் மூலம் கண்ணீரை தொடைத்தார். முகமது சிராஜ் கண் கலங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாதி வருகிறது.
✊ #AUSvIND pic.twitter.com/4NK95mVYLN
— cricket.com.au (@cricketcomau) January 6, 2021
இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து தங்களது கருத்துக்களை அளித்து வருகின்றனர். இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளரான முகமது சிராஜ் ஆஸ்திரேலியா வடைந்தபோது தான் அவரது தந்தை காலமானார். தனது தந்நையின் மரணத்திற்கு கூட செல்லாமல் இந்திய அணிக்காக விளையாடினார் சிராஜ். மேலும் இந்த தொடரில் கிடைக்கும் வெற்றியினை தனது தந்தையின் இழப்பிற்கு அஞ்சலியாக செலுத்துவேன் என்றும் சபதம் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் அழுத்தத்திற்கான விடயம் குறித்து விளக்கமளித்த சிராஜ் நான் கிரிக்கெட் விளையாடுவதே என் தந்தையின் ஆசை. இதனால் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி எனது வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பணம் செய்வேன் என்று கூறிருந்தார். அதன்படி இரண்டாவது டெஸ்டில் களமிறங்கிய சிராஜ் 5 விக்கெட்களை வீழத்தி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.