
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது தற்போது டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இன்றைய கடைசி நாள் ஆட்டம் துவங்கியதும் ஓரிரு மணி நேரத்தில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிடும்.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளை எடுத்த அவர் இரண்டாவது போட்டியிலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இப்படி 2 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் நடப்பு 2025 ஆம் ஆண்டில் சர்வதேச பந்துவீச்சாளராக ஒரு மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
அவருக்கு அடுத்து இந்த 2025 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக ஜிம்பாப்வே அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான பிளெஸ்ஸிங் முஸாபரணி 36 விக்கெட்டுகளுடன் முகமது சிராஜுக்கு அடுத்து இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து மிட்சல் ஸ்டார்க் 29 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : 2011 வேதனையை மறுபடியும் சந்திந்துள்ள ரோஹித்திடம்.. அந்த பசியை பாக்க நல்லாருக்கு.. சஞ்சய் பங்கர்
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 24 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோமல் வாரிக்கன் 23 விக்கெட்டுகளுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.