2011 வேதனையை மறுபடியும் சந்திந்துள்ள ரோஹித்திடம்.. அந்த பசியை பாக்க நல்லாருக்கு.. சஞ்சய் பங்கர்

Sanjay bangar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பதவியிலிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் ரோஹித் சர்மா தலைமையில் 2023 உலகக் கோப்பையில் இந்தியா 11 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இறுதிப்போட்டி வரை சென்று அசத்தியது. 2024 டி20 உலகக் கோப்பையை அவருடைய தலைமையில் வென்ற இந்தியா ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்று சாதனை படைத்தது.

அதனால் 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா கேப்டனாக விளையாடுவார் என்று நிறைய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது 40 வயதில் அவரால் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்கத் துவங்கியது. அதனால் அடுத்த உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -

2011 மாதிரியான வேதனை:

இருப்பினும் அதற்காக மனம் தளராத ரோஹித் சர்மா அடுத்த ஆஸ்திரேலியா தொடரில் பெரிய ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்காக தம்முடைய உடல் எடையை பெருமளவுக்கு குறைத்துள்ள அவர் மிகவும் ஃபிட்டாக மாறியுள்ளார். அதனால் தம்மை ஃபிட்டாக இல்லை என்று சொன்னவர்களுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று சொல்லலாம்.

இந்நிலையில் 2011 உலகக் கோப்பையில் இடம் கிடைக்காததால் சந்தித்த வேதனையை ரோஹித் சர்மா மீண்டும் சந்தித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். அந்த வேதனையுடன் ரோஹித் 2027 உலகக்கோப்பையில் விளையாட பசியுடன் தயாராகி வருவது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

2027 உலகக் கோப்பை வாய்ப்பு:

“கடைசியாக 2011 உலகக் கோப்பையில் இடம் பிடிக்காத போது தான் ரோஹித் சர்மா இந்தளவுக்கு கடுமையான ஃபிட்னஸை பின்பற்றினார். 2011இல் கழற்றி விடப்பட்டது அவருடைய இதயத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கியது. அப்போது மேற்கொண்ட உறுதியை தற்போது அவரிடம் மீண்டும் நம்மால் பார்க்க முடிகிறது. 2012 – 2024 வரை வெற்றிகரமான கேரியரை கொண்ட அவர் ஃபிட்னஸ் பற்றிய தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியாக வேலை செய்துள்ளார்”

இதையும் படிங்க: கடினமான டெல்லி பிட்ச்சில் அவர் தான் வெ.இஸை சுருட்ட காரணம்.. இது இங்கிலாந்தில் கற்ற பாடம்.. சுந்தர் பேட்டி

“அப்படி ரோஹித் சர்மாவிடம் மீண்டும் ஃபிட்னஸ் மற்றும் பசி இருப்பதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. கேப்டனாக நீங்கள் எப்போதும் 30 யார்ட் வட்டத்திற்குள் நிற்கும் வசதியைப் பெற மாட்டீர்கள். உள்வட்டத்திற்கு வெளியே சென்று ஃபீல்டிங் செய்து பங்காற்ற வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்வதற்காக ரோஹித் தயாராக இருப்பது நேர்மறையான அறிகுறியாகும்” என்று கூறினார்.

Advertisement