கடினமான டெல்லி பிட்ச்சில் அவர் தான் வெ.இஸை சுருட்ட காரணம்.. இது இங்கிலாந்தில் கற்ற பாடம்.. சுந்தர் பேட்டி

Washington Sundar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற கடைசி நாளில் 58 ரன்கள் மட்டும் தேவைப்படுகிறது. அக்டோபர் 10ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/5 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 248 ரன்களுக்கு சுருட்டி 270 ரன்கள் முன்னிலை பெற்றது.

அடுத்ததாக ஃபாலோ ஆன் பெற்று மீண்டும் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் போராடி 390 ரன்கள் குவித்தது. இறுதியில் 121 ரன்கள் இலக்கைத் துரத்தும் இந்தியா 4வது நாள் முடிவில் 63/1 ரன்களை எடுத்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் 3, 4வது நாட்களில் டெல்லி பிட்ச் பெரியளவில் சுழலுக்கு சாதகமாக இல்லை என்று இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடினமான டெல்லி:

அப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளில் 8 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் வெஸ்ட் இண்டீஸை சுருட்டுவதற்கு உதவியதாகவும் சுந்தர் பாராட்டியுள்ளார். கடந்த இங்கிலாந்து தொடரில் 25 நாட்கள் விளையாடியதால் இப்போட்டியில் 5 நாட்களும் விளையாடி எப்படி வெற்றி பெற வேண்டும் என்று பாடத்தைக் கற்றுக் கொண்டதாகவும் சுந்தர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இது அதிகம் பவுன்ஸ் இல்லாத சுழலுக்கு அதிகம் சாதகமற்ற வழக்கமான டெல்லி பிட்ச் என்று நான் சொல்வேன். ஆனால் வெவ்வேறு மைதானங்களில் விளையாடும் போது வெவ்வேறு சவால்கள் இருக்கும். அதுவே இந்த ஃபார்மட்டின் அழகாகும். நாங்கள் சொந்த ஊரிலும் வெளிநாட்டு மண்ணிலும் நிறையப் போட்டிகளில் விளையாடுகிறோம். அந்த அனைத்து சூழ்நிலைகளிலும் எதிரணி எங்களுடைய திறமைக்கு சவால் கொடுப்பார்கள்”

- Advertisement -

இங்கிலாந்தில் கற்ற பாடம்:

“அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அழகாகும். குல்தீப் சிறப்பாக பந்து வீசினார் என்று நினைக்கிறேன். அவர் சரியான இடத்தில் பந்துகளை நன்றாக வீசினார். மணிக்கட்டு ஸ்பின்னராக இருக்கும் அவருக்கு இது போன்ற பிட்ச்சில் கொஞ்சம் உதவி கிடைக்கும். அது உதவியும் செய்தது. அதேச மயம் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் உட்பட அனைவரும் இதயத்திலிருந்து பந்து வீசினார்கள்”

இதையும் படிங்க: விராட், ரூட் இல்லை.. 2 இந்தியர்கள் உட்பட தனது ஆல் டைம் டெஸ்ட் லெவன் அணியை வெளியிட்ட அம்லா

“எனவே இந்த பிட்ச்சில் 20 விக்கெட்டுகள் எடுத்ததற்காக மகிழ்ச்சியடைகிறோம். இங்கிலாந்தில் விளையாடியது 5 நாட்களிலும் விளையாடுவதற்கான புரிதலை எங்களுக்குக் கொடுத்தது. ஏனெனில் நாங்கள் இங்கிலாந்தில் ஒவ்வொரு போட்டியிலும் 180 – 200 ஓவர்கள் ஃபீல்டிங் செய்தோம். எனவே எங்களுக்கு இது புதிதும் அல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் மிகவும் ஃபிட்டாக உங்களுடைய ஆட்டத்தில் மேலே இருக்க வேண்டும். பெரும்பாலான போட்டிகள் 5வது நாள் வரை சென்று உங்களை சோதிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement