ஆசியக் கோப்பையில் சுப்மன் கில்லை போல்டாக்குவேன்.. காரணம் இதான்.. 2011 பின்னணியை பகிர்ந்த அமீரக பவுலர்

Simranjeet Singh
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கியது. அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லத் தயாராகியுள்ளது. இம்முறை குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன் அணிகளை லீக் சுற்றில் எதிர்கொள்கிறது.

இத்தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அவர் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதனால் அவரை ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலும் கேப்டனாக நினைக்கும் பிசிசிஐ இப்போதே துணை கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

சுப்மன் கில்லை தெரியும்:

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்மன் கில்லை தமக்கு சிறு வயதிலிருந்தே தெரியும் என்று அமீரக அணியின் பவுலர் சிம்ரன்ஜித் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவைச் சேர்ந்த தாம் அவருக்கு எதிராக உள்ளூரில் நிறைய பவுலிங் செய்துள்ளதாக சிம்ரன்ஜித் கூறியுள்ளார். எனவே ஆசியக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்தால் அவரை போல்ட்டாக்குவேன் என்றும் சிம்ரன்ஜித் தெரிவித்துள்ளார்.

இது பற்றி 35 வயதாகும் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில்லை குழந்தை முதலே எனக்குத் தெரியும். ஆனால் என்னை அவருக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. 2011 – 2012 காலகட்டங்களில் நாங்கள் 6 மணி முதல் 11 மணி வரை பயிற்சிகளை செய்வோம். சுப்மன் தன்னுடைய தந்தையுடன் பயிற்சி எடுக்க வருவார். எங்களுடைய பயிற்சி முடிந்ததும் அவருக்கு எதிராக நான் நிறைய பந்துகளை வீசியுள்ளேன்”

- Advertisement -

இந்தியாவுக்காக ஆசைப்பட்டேன்:

“அப்போது அவரை எண்ணற்ற முறையில் நான் போல்ட்டாக்கியுள்ளேன். 2021 முதல் நிறைய குழந்தைகளுக்கு பயிற்சியைக் கொடுத்து வரும் நான் ஓரளவு பணமும் சம்பாதிக்கத் துவங்கினேன். உள்ளூர் அளவுகோலை பூர்த்தி செய்த நான் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் சாரை தொடர்பு கொண்டேன். தற்போது அமீரக அணியின் பயிற்சியாளராக இருக்கும் அவர் எனக்கு உதவி செய்தார்”

இதையும் படிங்க: கடவுள்ன்னு நினச்சா இதான் நடக்கும்.. ப்ராட்மேன், சச்சினாக முடியாது.. விராட், ரோஹித்தை விமர்சித்த யோக்ராஜ்

“இங்கே யாரும் என்னுடைய தாடி அல்லது டர்பன் குறித்து கேள்வி கேட்பதில்லை. சுப்மன் கில்லுக்கு எதிராக பந்து வீசும் போது எனது குடும்பத்தினர் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று சொல்வது கடினம். இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கனவு. ஆனால் அங்கே வாய்ப்பு கிடைக்காததால் தற்போது அமீரகத்தில் விளையாடுகிறேன். எனவே என்னுடைய குடும்பமும் அந்த அணிக்கே ஆதரவு கொடுக்கும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement