கடவுள்ன்னு நினச்சா இதான் நடக்கும்.. ப்ராட்மேன், சச்சினாக முடியாது.. விராட், ரோஹித்தை விமர்சித்த யோக்ராஜ்

Yograj Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்பிய அவர்கள் கடந்த நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் மோசமாக பேட்டிங் செய்தனர். அதனால் அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து தொடருக்கு முன்பாக அவர்களை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது.

அதற்கு முன்பாக அவர்களாகவே மரியாதையுடன் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி விடை பெற முடிவெடுத்துள்ளனர். ஆனால் அப்போது 39, 40 வயதில் அவர்களால் சிறப்பாக விளையாட முடியாது என்ற கருதும் பிசிசிஐ இப்போதே கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.

- Advertisement -

சச்சின், ப்ராட்மேனாக முடியாது:

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா தங்களை நட்சத்திர ஜாம்பவான்களாக கருதுவதால் முன்பு போல் கடினமாக உழைப்பதில்லை என்று முன்னாள் வீரர் யோக்ராஜ் சிங் விமர்சித்துள்ளார். இப்படியே தொடர்ந்தால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் கழற்றி விடப்படும் சூழல் வரும் என்று அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி யோக்ராஜ் பேசியது பின்வருமாறு.

“விராட், ரோஹித் சிறந்த திறமையைக் கொண்டுள்ளதாக நான் நம்புகிறேன். எனவே அதிகாலை 5 மணிக்கு எழுந்து பயிற்சி செய்யுங்கள் என்று அவர்களிடம் சொல்வேன். இங்கே கிரிக்கெட்டை விட யாரும் பெரியவர் கிடையாது. ஆஸ்திரேலியாவில் விராட் தொடர்ந்து ஒரே மாதிரியாக அவுட்டானார். அவரிடம் நீங்கள் தவறாக விளையாடுகிறீர்கள் என்று ஏன் யாரும் சென்று சொல்லவில்லை?”

- Advertisement -

யோக்ராஜ் விமர்சனம்:

“கமான் பையனே, அதிகாலை 5 மணிக்கு எழுந்து 10 கிலோமீட்டர் ஓடு என்று ரோஹித்திடம் யார் சொல்லப் போகிறார்கள்? என்னைக் கேட்டால் இந்த விளையாட்டை விட யாரும் பெரியவர் கிடையாது என்று சொல்வேன். எனவே நீங்கள் அனைத்து நேரங்களிலும் அசத்த வேண்டும். நீங்கள் ஏன் 10க்கு 5 போட்டிகளில் தோல்வியடைக்கிறீர்கள்? டான் ப்ராட்மேன் 99.9 சராசரியைக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் ஏன் 54 – 55 கொண்டிருக்கிறீர்கள்?”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள்? விக்கெட்? எடுக்கப்போவது யார்? – தினேஷ் கார்த்திக் மற்றும் போக்ளே கணிப்பு

“ஏனெனில் நீங்கள் பெரும்பாலும் சுமாராக செயல்படுகிறீர்கள். உஙகளுடைய மனதின் பின்னணியில் நான் கடவுள், சிறந்தவர் என்ற சிந்தனைகள் இருக்கின்றன. சச்சின் 43 வயது வரை ஏன் விளையாடினார்? ஏனெனில் எப்போதும் தரையில் இருந்த அவர் மும்பைக்காக ரஞ்சிக்கோப்பையில் விளையாடுவார். பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஒன்று சிறப்பாக விளையாடுங்கள் அல்லது வெளியே போங்கள் என்று முகமது கைஃப்பிடம் தெரிவித்ததைப் பார்த்துள்ளேன். எனவே ரோஹித் போன்றவர் கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் சொல்வேன்” எனக் கூறினார்.

Advertisement