இந்திய அணியின் நட்சத்திர வீரரான அவரை நான் நேர்ல பாக்கனும்.. அதுதான் என் ஆசை – சிம்ரன் ஷையிக்

Simran
- Advertisement -

பெங்களூரு நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த அடுத்த ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் மும்பையைச் சேர்ந்த 22 வயதான வீராங்கனை சிம்ரன் ஷையிக்கை 1 கோடியே 90 லட்சம் என்கிற மிகப் பெரிய தொகைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பல்வேறு அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனை போட்டி போட்டு ஏலத்தில் தேர்ந்தெடுத்தன.

அவரை நேரில் பார்க்க வேண்டும்.. அதுதான் என் ஆசை :

அதில் இந்திய வீராங்கனைகள் சிலர் கோடிகளில் விலை போனது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அன் கிப்டு வீராங்கனையாக அதிக இரண்டாவது அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன வீராங்கனையாக சிம்ரன் ஷையிக் சாதனை நிகழ்த்தினார்.

- Advertisement -

மும்பை தாராவி பகுதியைச் சார்ந்த இவர் அதிரடி பேட்டராக அனைவராலும் அறியப்படுபவர். அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 சேலஞ்சர்ஸ் டிராபியில் 8 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 202 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய அவருக்கு பல அணிகள் மத்தியிலும் ஏலத்தில் எடுக்க போட்டிகள் இருந்த வேளையில் குஜராத் அணி அவரை மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது.

ஏற்கனவே சிம்ரன் ஷையிக் குறித்த பல்வேறு தகவல்கள் அதிகமாக பகிரப்பட்டு வரும் வேளையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை நேரில் சந்திப்பதே தனது கனவு என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சிம்ரன் ஷையிக் கூறுகையில் : என்னுடைய பயணம் இப்பொழுதுதான் துவங்கியுள்ளது. நான் என்னுடைய சிறப்பான பங்களிப்பை குஜராத் அணிக்காக வழங்க காத்திருக்கின்றேன்.

- Advertisement -

அதன் பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்காகவும் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கனவு. மேலும் எங்களுடைய சமூகத்தில் என்னை யாரும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள். பொதுவாகவே இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது என்ற பேச்சு உண்டு.

இதையும் படிங்க : கடவுளே நான் இன்னும் என்ன தான் பண்ணனும்.. மும்பை அணியின் நிராகரிப்பால் – புலம்பிய ப்ரித்வி ஷா

ஆனால் நான் என்னுடைய வாழ்க்கையை நோக்கியும், என்னுடைய குறிக்கோளை நோக்கி நகர்ந்தேன். அதனால் தற்போது என்னுடைய கனவை எட்டிப் பிடித்துள்ளேன். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை காண வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என சிம்ரன் ஷையிக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement