கடவுளே நான் இன்னும் என்ன தான் பண்ணனும்.. மும்பை அணியின் நிராகரிப்பால் – புலம்பிய ப்ரித்வி ஷா

Prithvi-Shaw
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான மும்பை அணி ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் கீழ் மும்பை மாநில கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

மும்பை அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ப்ரித்வி ஷா :

அந்த 17 பேர் கொண்ட அணியில் அஜின்க்யா ரஹானே மற்றும் ப்ரிதிவி ஷா ஆகியோர் இடம் பெறவில்லை. மொத்தம் 37 அணிகள் பங்கேற்கும் இந்த விஜய் ஹசாரே கோப்பை தேசிய அணியில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கான போட்டிக்களமாக பார்க்கப்படும் ஒரு முக்கிய தொடராக இருந்து வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் அந்தத் தொடரில் தனது பெயர் இடம்பெறாதது குறித்து மும்பை அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :

இன்னும் நான் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்.. நீங்களே சொல்லுங்கள் கடவுளே.. 65 இன்னிங்ஸ்களில் 126 ஸ்ட்ரைக் ரேட் 55 ரன்கள் சராசரியுடன் 3399 ரன்கள் எடுத்துள்ளேன். ஆனால் இதுவும் போதுமானதாக இல்லையா? இருந்தாலும் நான் என்னுடைய திறமை மீது இன்னமும் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

- Advertisement -

மக்களும் இன்னும் என்னை நம்புவார்கள் என்று நம்புகிறேன். நிச்சயமாக நான் மீண்டும் திரும்பி வருவேன். “ஓம் சாய் ராம்” என்று கூறியுள்ளார். மிக இளம் வயதிலேயே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ப்ரிதிவி ஷா ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இதையும் படிங்க : ஜடேஜாவால் தான் சாத்தியமாச்சு.. இதுலயும் சிறந்த பிளேயர்ன்னு காமிச்சுருக்காரு.. கேஎல் ராகுல் பாராட்டு

பின்னர் அண்மையில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது விஜய் ஹசாரே தொடரிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதோடு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் ஏலத்திலும் அவரை யாரும் அடிப்படை விலைக்கு கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement