ஜடேஜாவால் தான் சாத்தியமாச்சு.. இதுலயும் சிறந்த பிளேயர்ன்னு காமிச்சுருக்காரு.. கேஎல் ராகுல் பாராட்டு

KL Rahul 5
- Advertisement -

காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் மீண்டும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 74-5 என தடுமாறிய இந்திய அணிக்கு துவக்க வீரர் கே.எல் ராகுல் முடிந்தளவுக்கு போராடி 84 ரன்கள் குவித்தார்.

அவருடன் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைச்சர் ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் விளாசி போராடி அவுட்டானார். அப்போதும் ஃபாலோ ஆனை தவிர்க்க இந்தியாவுக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. அந்த இக்கட்டான நேரத்தில் ஆகாஷ் தீப் 27*, பும்ரா 10* ரன்கள் இந்தியாவை குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்கள்.

- Advertisement -

ஜடேஜா அசத்தல்:

இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா பெரும்பாலும் பந்து வீச்சுக்காக மட்டுமே பாராட்டப்படுவதாக கேஎல் ராகுல் கூறியுள்ளார். ஆனால் இந்தப் போட்டியில் ஜடேஜா தம்மை பேட்டிங்கிலும் சிறந்த வீரர் என்பதை காண்பித்துள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று ஜடேஜா அபாரமாக செயல்பட்டார். நீண்ட வருடங்களாக அவர் லோயர் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்”

“அதைத்தான் நீங்கள் அவரிடம் எதிர்பார்க்க முடியும். இதை தம்மால் செய்ய முடியும் என்பதை அவர் நீண்ட வருடங்களாக நிரூபித்து வருகிறார். அவருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தேவைப்பட்ட நேரத்தில் அவர் டெயில் எண்டர்களுடன் சேர்ந்து 70 – 80 ரன்கள் எடுத்தார். இன்று அடிக்கப்பட்ட ஒவ்வொரு ரன்னும் ஃபாலோ ஆனை தாண்ட முக்கியமானது”

- Advertisement -

ராகுல் பாராட்டு:

“ஜடேஜா அதை சாத்தியமாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அனுபவமிக்க அவர் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அவர் எங்களுக்கு என்ன தேவை என்பதை கச்சிதமாக உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் களத்தில் செயல்பட்டார். பெரும்பாலான நேரங்களில் ஜடேஜாவின் பவுலிங் மட்டுமே பேசப்படும். ஆனால் அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ரோஹித் வேணாம்.. இந்தியாவின் ஓப்பராக ராகுல்.. ஜெய்ஸ்வாலுக்கு இந்த ஹெல்ப் பண்ணனும்.. கவாஸ்கர் பேட்டி

“திடமான டெக்னிக் கொண்டுள்ள அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பேட்டிங் செய்தேன். அவருடன் சேர்ந்து பயிற்சி மற்றும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி. அவர் மிகவும் எளிமையான திட்டத்தை வைத்துள்ளது தெரிகிறது. அந்த வகையில் இந்தப் போட்டியில் அணிக்குள் வந்து அவர் தனது வேலையை செய்ததை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி” என்று கூறினார்.

Advertisement