இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பை பெற்றுள்ள வேளையில் மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மகளிர் ஐபிஎல் தொடரை மும்பை அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இரண்டாவதாக இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த மகளிர் ஐபிஎல் தொடரை பெங்களூரு அணி கைப்பற்றியிருந்தது.
என் மக்களால் எங்க வாழ்க்கை மாறப்போகுது :
இந்நிலையில் மூன்றாவது ஆண்டாக 2025-இல் நடைபெற இருக்கும் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூரு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் பல்வேறு வீராங்கனைகள் பல அணிகளுக்காக வாங்கப்பட்டிருந்தனர்.
அதில் பெரிய தொகைக்கு சில இந்திய வீராங்கனைகளும் வாங்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த 22 வயதான சிம்ரன் ஷையிக் என்கிற வீராங்கனை குஜராத் அணிக்காக 1 கோடியே 90 லட்சம் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார்.
உள்ளூர் போட்டிகளில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்த பெரிய தொகையை குஜராத் அணி வழங்கி உள்ளது. இந்நிலையில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட சிம்ரன் ஷையிக்கின் தந்தை தாங்கள் தற்போது இருக்கும் நிலை குறித்தும், இனி எதிர்காலத்தில் எப்படி இருக்க போகிறோம் என்று குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எங்கள் வாழ்நாள் முழுவதுமே நாங்கள் திறந்த வாய்க்கால்களை கொண்ட குறுகிய தெருவில் வசித்து வந்தோம். எங்களது குடும்பத்தில் நாங்கள் மொத்தம் 11 பேர். ஆனால் இரண்டு அறைகளில் தான் வாழ்ந்து வருகிறோம். எங்களது மகளுக்கு கிடைத்த இந்த பணத்தின் மூலம் நாங்கள் ஒரு நல்ல வீட்டை வாங்கி கண்ணியமான வாழ்க்கையில் வாழப் போகிறோம்.
இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் இருக்கும் அந்த டெக்னிக்கை டெஸ்டிலும் யூஸ் பண்ணுங்க.. ரோஹித்துக்கு – ஹெய்டன் அட்வைஸ்
என் மகள் கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று என்னுடைய நண்பர்கள் பலர் கூறினார்கள். நான் அவர்களின் பேச்சைக் கேட்காமல் என்னுடைய மகளை அவரது விருப்பத்திற்காக விளையாட அனுமதித்தேன். தற்போது அவரால் எங்களது வாழ்க்கை முற்றிலுமாக மாறியுள்ளது மகிழ்ச்சி என்று சிம்ரன் ஷையிக்கின் தந்தை உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



