ஒருநாள் கிரிக்கெட்டில் இருக்கும் அந்த டெக்னிக்கை டெஸ்டிலும் யூஸ் பண்ணுங்க.. ரோஹித்துக்கு – ஹெய்டன் அட்வைஸ்

Hayden
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த சில டெஸ்ட் தொடர்களாகவே பேட்டிங்கில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்த போட்டியிலாவது ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ரோஹித் சர்மா சரிவிலிருந்து மீள இதைச்செய்ய வேண்டும் :

இவ்வேளையில் அவரது பேட்டிங் ஃபார்ம் தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது அனைவருக்கும் வருத்தமான விடயமாக மாறியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் கே.எல் ராகுல் 33 ரன்களுடனும், ரோகித் சர்மா ரன்கள் எதுவும் எடுக்காமலும் மூன்றாம் நாள் முடிவில் களத்தில் இருந்தனர். அதனை தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் இன்னிங்க்ஸை தொடரவுள்ளனர்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் தடுமாற்றமான பேட்டிங் ஃபார்ம் சரியாக வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா பொதுவாகவே எளிதாக ரன்களை குவிக்கக்கூடிய ஒரு வீரர்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள இரட்டை சதங்களை பார்த்தால் நிச்சயம் அவர் எப்பேர்ப்பட்ட வீரர் என்பது தெரிய வரும். ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படிப்பட்ட எனர்ஜியுடன் அவர் விளையாடுகிறாரோ அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் எனர்ஜியுடன் விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை டிபன்சிவ் ஆட்டத்தை அவர் விளையாடி வருகிறார். அது அவரது ஆட்டத்திற்கு செட்டாகாது.

இதையும் படிங்க : 31 வயதிலேயே ரிட்டயர்மென்ட்டை அறிவித்த இந்திய வீரர்.. அடுத்த திட்டம் இதுதானாம் – விவரம் இதோ

எனவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டை போன்று எனர்ஜியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒருவேளை அவர் ஒருநாள் போட்டிகளை போன்று டெஸ்ட் கிரிக்கெட்டையும் எதிர்கொண்டால் நிச்சயம் ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினால் அவரால் மிகப்பெரிய ரன்குவிப்பை வழங்க முடியும் என மேத்யூ ஹைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement