தோனி கூலாக மட்டும் இருக்கமாட்டார். அவர் பண்ணும் சேட்டை இருக்கே – மனம்திறந்த சைமன் டபள்

Umpire
- Advertisement -

தோனி கேப்டனாகவும் வீரராகவும் இருந்த காலகட்டத்தில் என்னதான் விளையாட்டில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த தவறியதில்லை . பல நேரங்களில் ஆடுகளத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர்களுடன் தோனி விளையாடியதைப் பார்த்து இருப்போம்.

Dhoni-Csk

- Advertisement -

அதுபோல் வீரர்களிடமும் ஆடுகளத்தில் வெறுமனே இருக்காமல் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பார். அப்படி நடுவர்கள் இடம்கூட விளையாடியுள்ளார் தோனி இந்நிலையில் ஓய்வு பெற்ற நடுவரான சைமன் டபிள் தோனியுடன் ஆன ஒரு சுவாரசியமான அனுபவத்தை பற்றி பேசி உள்ளார்.

இவர் மொத்தமாக 74 டெஸ்ட் போட்டிகளிலும் 174 ஒருநாள் போட்டிகளிலும் 34 டி20 போட்டிகளில் நடுவராக பணியாற்றி உள்ளார் . மேலும் ஐசிசி அளிக்கும் ஒரு ஆண்டின் மிகச் சிறந்த நடுவர் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தான் கிரிக்கெட் ஆடுகளத்தில் சந்தித்த பலதரப்பட்ட வீரர்கள் குறித்து பேசியுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் 3 பேரை கூறுவேன். அதில் தோனியும் ஒருவர் ஆஸ்திரேலியாவின் டேரன் லீ மேன், ஷேன் வார்ன் ஆகியோரும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருந்தனர்.

மேலும் தோனியை பற்றி அவர் தொடர்ந்து பேசிய அவர் : தோனி ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் ஆட்டத்தை மிகச்சரியாக கையாளக் கூடிய ஒரு அறிவாளி எப்போதும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பார். சூழ்நிலையை மிகத் தெளிவாக நிதானமாக கையாள்வதில் அவர் வல்லவர் ஆனால் பலருக்கும் ஒரு விஷயம் தெரியாது. அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் இதனை ஆடுகளத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் சைமன் டபள்.

Advertisement