5வது ஓவர் வேணும்.. டி20யில் பேட்டிங், பவுலிங் சமமாக இந்த ரூல்ஸை மாத்துங்க.. அம்பயர் சைமன் பேட்டி

Simon Taufel
- Advertisement -

உலகளவில் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் 2வது விளையாட்டாக வலம் வருகிறது. ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் 50 ஓவர்களில் 200 – 250 ரன்கள் அடிப்பதே மிகவும் கடினமானதாக பார்க்கப்பட்டது. அந்தளவுக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் இடையே சமமான போட்டி இருக்கும். அந்த போட்டிகளைப் பார்பதில் இயற்கையாகவே சுவாரசியம் இருக்கும்.

ஆனால் நாளடைவில் டி20 போட்டிகளின் வருகையால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிகமாக செலுத்தத் துவங்கியுள்ளார்கள். அதனால் இப்போதெல்லாம் 20 ஓவர்களிலேயே எளிதாக 200 – 250 ரன்கள் அடிக்கப்படுகின்றன. இது போக ரசிகர்களை கவர்வதற்காக நிறைய விதிமுறைகள் பேட்டிங் துறைக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

5வது ஓவர் வேண்டும்:

எடுத்துக்காட்டாக நிறைய சிக்சர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக பவுண்டரி எல்லையின் அளவு குறைக்கப்பட்டதை சொல்லலாம். நோஃபால் போட்டால் அதற்கு தண்டனையாக 1 ரன் வழங்குவதுடன் ஃபிரீ ஹிட் வழங்கப்படுவதையும் சொல்லலாம். அப்படி பல்வேறு அடிப்படை விதிமுறைகளே பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கிறது.

அதனால் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான போட்டி இல்லை என்பதே நிதர்சனமாகும். இந்நிலையில் டி20 போட்டிகளில் சமநிலையைக் கொண்டு வர போட்டி நாளன்று சிறப்பாக பவுலிங் செய்யும் பவுலருக்கு 5வது ஓவரை வீசும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பிரபல முன்னாள் அம்பயர் சைமன் ஃடபுல் தெரிவித்துள்ளார். அதற்காக ஏதேனும் ஒரு பவுலர் 5 ஓவரை வீசலாம் என்ற விதிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

விதிமுறை மாறனும்:

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் நான் சில பிரிமியர் லீக் டி20 தொடர்களுக்கு சில பரிந்துரைகளை கொடுத்துள்ளேன். அவற்றுக்கு இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமநிலை இருப்பதை நான் மீண்டும் பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: இலங்கை மக்களுக்காக.. வெள்ள நிவாரண நிதி திரட்ட உதவும் இந்திய அணி.. வெளியான அறிவிப்பு

“அதற்காக டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலர் 5வது ஓவரை வீசுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஒரு பேட்ஸ்மேன் முதல் பந்திலிருந்து விளையாடி 100 ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்பை பெறுகிறார் என்பது உங்களுக்குத் தெரியும் ஆனால் பவுலர்களை மட்டும் நாம் 4 ஓவர்களுடன் வரையறுக்கிறோம். எனவே ஒரு பவுலருக்கு நாம் ஒரு எக்ஸ்ட்ரா ஓவரை கொடுக்கலாம். அது ஆதிக்கம் செலுத்தக்கூடிய பேட்ஸ்மேனுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் பவுலர் பந்து வீசும் வாய்ப்பைக் கொடுக்குமல்லவா? இது போன்ற விஷயங்களை செய்து நாம் எப்படி மீண்டும் சமநிலையை கொண்டு வரலாம் என்று பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.

Advertisement