இறுதிப்போட்டி நடைபெறும் ஏஜஸ் பவுல் மைதானம் யாருக்கு சாதகம் ? – மைதான வடிவமைப்பாளர் கருத்து

Ageas
- Advertisement -

இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால் இந்த போட்டியின் மீதான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த இறுதிப் போட்டி குறித்த சுவாரஸ்ய தகவலும் அதிகம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை அளித்து வருகின்றனர்.

INDvsNZ

- Advertisement -

அதில் இந்தியாவைச் சேர்ந்த சில வீரர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும் இங்கிலாந்து மைதானங்கள் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமையும் என்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் ஏஜஸ் பவுல் மைதான தயாரிப்பாளர் இந்த மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கும் என்று கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த இறுதிப் போட்டிக்கான மைதானத்தை தயாரிக்க உள்ள சவுத்தாம்ப்டன் மைதான தயாரிப்பாளரான சைமன் லீ இந்த இறுதிப்போட்க்கான மைதானம் எவ்வாறு வடிவமைக்கப்படும் என்பது குறித்து ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் : சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அதுமட்டுமின்றி இந்த இறுதிப்போட்டிக்கான பிட்ச் அமைக்கும் பணி எனக்கு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.

southampton

இங்கிலாந்து மைதானங்களில் பொதுவாகவே வேகம் அதிகம் இருக்கும் ஆனால் இங்கு நிலவும் காலநிலை காரணமாக நாம் நினைத்தபடி பிட்ச் அமைப்பது சற்று கடினமான விடயம். ஆனால் தற்போது இங்கிலாந்தில் கோடை காலமாக இருப்பதால் பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகி நல்ல வேகத்துடன் வரும்படியான ஆடுகளத்தை நிச்சயம் எங்களால் தயார் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

மைதானத்தில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் பொழுது அது நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சவுகரியத்தை கொடுக்கும். அந்த வகையில் என்னை பொருத்தவரை நியூசிலாந்து அணிக்கு இந்த இறுதிப்போட்டியில் மைதானம் சாதகமாக அமைய பெரிய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தற்போது தான் அவர்கள் கிட்டத்தட்ட இதே மாதிரி இருக்கும் பிச்சில் விளையாடி இங்கிலாந்து அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளனர்.

Southee 2

தை கணக்கில் வைத்து பார்க்கும் போது இந்த இறுதிப் போட்டியில் அவர்களது பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் நிச்சயம் பழக்கப்பட்ட ஒன்றாகவும், சாதகமான ஒன்றாக அமையும் என பிட்ச் வடிவமைப்பாளர் சைமன் லீ கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் உலகத்தரத்தில் இருப்பதனாலும் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருவதனாலும் அவர்களும் இந்த போட்டியில் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement