- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுக்குள்ள அவுட்டாக்கிடுவாரு.. பும்ராவை அடிக்க இதை செய்ங்க.. ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு கேட்டிச் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கும் அந்தத் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. இந்தத் தொடரில் விராட் கோலியை கூட ஆஸ்திரேலியா எளிதாக சமாளித்து வருகிறது.

ஆனால் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதற்கடுத்த போட்டிகளிலும் அசத்தும் அவர் இதுவரை 21* விக்கெட்டுகள் எடுத்து மிரட்டி வருகிறார்.

- Advertisement -

அதுக்குள்ள அவுட்டாக்கிடுவாரு:

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அதிரடியாக ரன்கள் குவிக்க முயற்சிப்பதாக முன்னாள் வீரர் சைமன் கேடிச் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் பும்ரா உங்களை அவுட்டாக்கி விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தரமான பும்ராவிடம் ஸ்ட்ரைக்கை மாற்றி சிங்கிள் டபுள் ரன்கள் எடுப்பது மட்டுமே ரன்கள் குவிக்கும் வழி என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது கேட்டிச் பேசியது பின்வருமாறு. “பும்ராவிடம் நேர்மறையாக நோக்கத்துடன் விளையாடுவதைப் பற்றிய பேச்சுகள் இருப்பது எனக்கு தெரியும். அது நல்ல விஷயம். ஆனால் பும்ராவுக்கு எதிராக விளையாடுவது பவுண்டரிகளை அடிப்பதை பற்றியது மட்டும் கிடையாது. நீங்கள் 10வது ஓவருக்கு மேல் மைதானத்திலேயே இல்லையெனில் எப்படி அவருக்கு எதிராக உங்களால் அதிரடியாக விளையாட முடியும்”

- Advertisement -

பும்ராவை அடிக்க ஆலோசனை:

“எனவே அது அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாக இருக்கும். கடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியர்கள் அதிரடியாக விளையாடும் நோக்கத்தில் வந்தனர். ஆனால் என்ன நடந்தது என்று பாருங்கள். நேரம் முடிவதற்குள் 80-7 என ஆஸ்திரேலியா சரிந்தது. சிவப்பு நிற பந்தில் நீங்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: 46க்கு அவுட்டாகியும் முன்னேறல.. இந்திய பேட்ஸ்மேன்கள் இதை செஞ்சாவே ரன்ஸ் வரும்.. பார்திவ் படேல் பேட்டி

“பும்ராவின் கட்டுப்பாடு மற்றும் லென்த் ஆகியவை காரணமாக அவருக்கு எதிராக நீங்கள் அதிரடியாக விளையாட முயற்சித்தால் அது கடினமாகும். எனவே இவை அனைத்தும் ஸ்ட்ரைக்கை மாற்றி தடுப்பாட்டுத்துடன் விளையாடுவதை பற்றியதாகும்” என்று கூறினார். அந்த வகையில் தனி ஒருவனாக போராடும் பும்ராவுக்கு மற்ற வீரர்களும் கை கொடுத்தால் முதல் போட்டி போல இந்தியா வெல்வதற்கு பிரகாச வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -