அந்த நாட்டுல இருந்தது ஜெயில் மாதிரி உணர்ந்தேன், நல்லவேளை கடவுள் காப்பாத்திட்டாரு – சைமன் டௌல் அதிரடி கருத்து

Doull
- Advertisement -

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டௌல் சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக 32 டெஸ்ட் மற்றும் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 134 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த 1992 – 2000 வரையிலான காலகட்டங்களில் நியூசிலாந்துக்காக விளையாடி ஓய்வு பெற்ற அவர் கடந்த பல வருடங்களாக நேரலை போட்டிகளில் வர்ணனையாளராக செயல்பட்டு ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்துள்ளார். அத்துடன் பொதுவாகவே உண்மையான கருத்துக்களை பேசுவதற்கு தயக்கமில்லாத அவர் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற 2023 பிஎஸ்எல் தொடரில் அந்நாட்டின் கேப்டன் பாபர் அசாமை விமர்சித்தது பெரிய சர்ச்சையாக மாறியது.

- Advertisement -

அதாவது சமீப காலங்களாகவே தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததை நாம் அனைவரும் அறிவோம். சொல்லப்போனால் அணியின் நலனுக்காக சுயநலத்தை விட்டு உங்களது ஓப்பனிங் இடத்தை இளம் வீரர்களுக்கு கொடுத்து மிடில் ஆர்டர் விளையாடுமாறு முன்னாள் ஜாம்பவான் கேப்டன் வாசிம் அக்ரம் நேரடியாக கேட்டுக் கொண்டும் அதைக் கேட்காத அவர் அந்த இடத்திலேயே விளையாடி வருகிறார்.

கடவுள் கருணை:
மேலும் சோயப் அக்தர் போன்ற சில முன்னாள் வீரர்களும் பாபர் அசாமின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி சமீப காலங்களில் நேரடியாக விமர்சித்தனர். அந்த நிலையில் பிஎஸ்எல் தொடரில் குயிட்டா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த பாபர் அசாம் வேகமாக 83 ரன்களை தொட்டதும் சதத்தை நழுவ விடக்கூடாது என்பதற்காக மெதுவாக விளையாடி அடுத்த 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து சதமடித்தார். அப்படி மொத்தமாக 65 பந்துகளில் 115 ரன்கள் குவித்த போதிலும் கடைசியில் அவரது அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திப்பதற்கு அவருடைய மெதுவான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் சதத்திற்காக விளையாடாமல் அணிக்காக விளையாடுங்கள் என்று பாபர் அசாமை நேரடியாக சைமன் டௌல் நேரலையில் விமர்சித்தார். அதனால் கோபமடைந்த பாபர் அசாம் ரசிகர்கள் அடுத்த நாளே அவருடைய ட்விட்டர் கணக்கின் இமெயில் முகவரியை மாற்றி குடும்பத்தை இழுத்து மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள். அதை உடனடியாக ட்விட்டரில் அம்பலமாக்கிய சைமன் டௌல் “உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனால் உண்மையை பேசுவதற்காக தான் நான் சம்பளம் வாங்குகிறேன்” என்று பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

ஆனாலும் விடாத அந்நாட்டு ரசிகர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் ஒரு சில போட்டிகளுக்கு பின் களத்தில் நேரடியாக பாபர் அசாமை சந்தித்து சைமன் டௌல் பேசினார். அதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் சற்று அமைதியான நிலையில் சமீபத்திய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் பாபர் அசாம் ஸ்ட்ரைக் ரேட் பற்றி சைமன் டௌல் நேரலையில் விமர்சித்தது மீண்டும் பாகிஸ்தான் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

Simon Doull Babar azam

இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் வர்ணையாளராக செயல்பட்டு வரும் அவர் பாகிஸ்தானில் இருந்தது ஜெயில் போன்ற அனுபவத்தை கொடுத்ததாக வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக வெளியில் சென்று உணவு சாப்பிட தலை காட்ட முடியாத அளவுக்கு பாபர் அசாம் ரசிகர்கள் தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் கடவுள் கருணையால் அந்நாட்டிலிருந்து தப்பி வந்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஜியோ நியூஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானில் இருப்பது சிறையில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை கொடுத்தது. பாபர் அசாம் ரசிகர்கள் எனக்காக அனைத்து இடங்களிலும் காத்திருப்பதால் நான் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாமல் இருந்தேன். அதனால் நிறைய நாட்கள் உணவு சாப்பிட முடியாமல் ஹோட்டல் அறையிலேயே தவித்தேன்”

இதையும் படிங்க:CSK vs RR : தோனி மட்டும்மல்ல இன்னொரு வீரருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது – சி.எஸ்.கே கோச் பிளெமிங் ஓபன்டாக்

“அத்துடன் மனதளவில் தொல்லையை சந்தித்தேன். இருப்பினும் கடவுள் கருணையால் எப்படியோ தப்பித்து விட்டேன்” என்று கூறினார். இருப்பினும் தற்போது விராட் கோலி சொந்த சாதனைகளுக்காக விளையாடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அவர் விமர்சித்தது சில இந்திய ரசிகர்களையும் அதிருப்தியை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement