CSK vs RR : தோனி மட்டும்மல்ல இன்னொரு வீரருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது – சி.எஸ்.கே கோச் பிளெமிங் ஓபன்டாக்

Magala-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 17 லீக் போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஒவ்வொரு அணிகளுமே புள்ளி பட்டியலில் போட்டி போட்டு முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் வீரர்கள் அடிக்கடி காயம் அடைந்து வருவது தொடர் கதையாகியுள்ளது.

RR vs CSK Sandeep Sharma Holder Jaiswal Aadam Azampa

- Advertisement -

ஏற்கனவே இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பல்வேறு அணிகளை சேர்ந்த முன்னணி வீரர்களும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறிய வேளையில் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக பலருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தற்போது தொடர் நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சில வீரர்கள் காயம் அடைந்து வெளியேறி வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், தீபக் சாகர் ஆகியோர் காயத்தை சந்தித்துள்ள வேளையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது தோனியும் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. அதேபோன்று தற்போது தோனியை தொடர்ந்து மற்றொரு வீரரும் காயம் அடைந்துள்ளார் என்றும் அவர் விளையாடுவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

Magala

அதன்படி நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டிக்கு பிறகு பேட்டியளித்த சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில் : தோனி முழங்கால் காயத்துடன் தான் விளையாடி வருகிறார். அவர் தற்போது மெதுவாக குணமடைந்து வருகிறார். அவருக்கு அந்த காயம் ஏதோ ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர் : அதேபோன்று சிஸாண்டா மகாலாவிற்கு நேற்றைய போட்டியின் போது காயம் ஏற்பட்டது. அதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவர் விளையாட மாட்டார் என்று ஸ்டீபன் பிளமிங் வெளிப்படையாக தனது கருத்தை கூறியுள்ளார். இதனால் அடுத்த மூன்று போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாட மாட்டார் என்ற தகவலும் உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : 41 வயதில் வலியுடன் போராடிய தோனி, கடைசி பந்தில் ஏமாற்றம் – நொண்டி நடந்ததால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த போட்டியில் பெங்களூரு அணியை வரும் 17-ஆம் தேதி சந்திக்கவிருக்கும் வேளையில் அந்த போட்டிக்கான அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் எந்தெந்த வீரர்கள் புதிதாக வரப்போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement