அவரை மாதிரி ஒரு சோம்பேறியை டெல்லி அணியில் இருந்து நீக்கியது சரிதான் – சைமன் டவுல் விளாசல்

Simon Doull
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டேவிட் வார்னரின் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த தொடரின் முதல் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த டெல்லி அணியானது கடைசியாக ஒரு வெற்றியைப் பெற்று 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிபட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்தது.

DC

- Advertisement -

இந்நிலையில் நேற்று டெல்லி மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 34-ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி சன்ரைசர்ஸ் அணியை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களது இரண்டாவது வெற்றியைப் பெற்று இருந்தாலும் இந்த ஐபிஎல் தொடரில் அவர்கள் பிளேஆப் சுற்றுக்கு செல்வது சிக்கலாகியுள்ளது. ரிஷப் பண்ட் தலைமையில் ஓரளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணி இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக டெல்லி அணியின் வீரர்கள் பேட்டிங்கில் பெரிய அளவில் தடுமாற்றத்தை கண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிலும் குறிப்பாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சர்ஃப்ராஸ் கான் மிடில் ஆர்டரில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் ஆறு போட்டியில் விளையாடியுள்ள ப்ரித்வி ஷா இரண்டு முறை டக் அவுட்டானது மட்டுமின்றி இந்த தொடர் முழுவதுமே 47 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

Prithvi-Shaw

அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 120-க்கும் குறைவாக இருப்பதினால் அவரை டெல்லி அணியின் நிர்வாகம் அணியிலிருந்து கழற்றிவிட்டுள்ளது. மிகச் சிறப்பான பேட்டிங் திறனை உடைய அவர் அதிரடியாக ஆடி நல்ல துவக்கத்தை கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் வேளையில் இந்த தொடர் முழுவதுமே அவர் மந்தமாக செயல்பட்டதால் இந்த நீக்கம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதே போன்று பேட்டிங் செய்வதை தவிர்த்து பீல்டிங்கில் மிகவும் மந்தமாக செயல்படும் அவர் அணியில் இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சைமன் டவுள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ப்ரித்வி ஷா விரைவில் அவரது பிரச்சனைகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் இல்லை. என்றால் அவருக்கு இதே நிலைதான் நீடிக்கும். தற்போது சொதப்பும் அவரை அணியிலிருந்து நீக்கியது சரிதான்.

இதையும் படிங்க : அதுல அவர் தான் பெஸ்ட், சச்சினின் 100 சதங்களை ஈஸியா அடிச்சாலும் அதை விராட் கோலியால் தொட முடியாது – பாண்டிங் ஓப்பன்டாக்

ஏனெனில் அவரை எதிர்பார்த்து ஏமாற்றத்தை சந்திப்பதை விட அவருக்கு பதிலாக நல்ல வீரரை விளையாட வைக்கலாம். அவர் சோம்பேறித்தனமாக பீல்டிங் செய்கிறார் அதோடு பேட்டிங்கிலும் மிகவும் மந்தமாக காணப்படுகிறார். ரன் எடுக்க ஓட கூட முடியாமல் தடுமாறி ஓடுகிறார் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை அவர் மாற்றி நல்ல உடற்தகுதியுடன் சுறுசுறுப்புடன் விளையாட வேண்டும் என சைமன் டவுள் அவரை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement