அதுல அவர் தான் பெஸ்ட், சச்சினின் 100 சதங்களை ஈஸியா அடிச்சாலும் அதை விராட் கோலியால் தொட முடியாது – பாண்டிங் ஓப்பன்டாக்

- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏப்ரல் 24ஆம் தேதி தன்னுடைய 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். தனது 16 வயதில் 1989இல் அறிமுகமாகி வாசிம் அக்ரம், கிளன் மெக்ராத், பிரட் லீ, சோயப் அக்தர், ஷேன் வார்னே, முரளிதரன் என உலகின் அத்தனை தரமான டாப் பவுலர்களை எதிர்கொண்டு ரன் மெஷினாக 30000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்தியாவுக்கு 2011 உலகக் கோப்பை உட்பட நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 24 வருடங்கள் காயம் மற்றும் ஃபார்ம் ஆகியவற்றை கடந்து விளையாடி காலத்தால் அழிக்க முடியாத சாதனை நாயகனாக இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படுகிறார்.

Sachin

- Advertisement -

இருப்பினும் சாதனைகள் என்றால் ஒருநாள் உடைக்கப்படுவதற்காக படைக்கப்படுகிறது மற்றும் வல்லவனுக்கு வல்லவன் வருவான் என்ற சொல்லுக்கு ஏற்ப சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் அவரது இடத்தில் அவரைப்போலவே ரன் மெஷினாக செயல்பட்டு வரும் விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் உலகின் அனைத்து டாப் தரமான பவுலர்களையும் எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறை வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்த சச்சினை மிஞ்சி அதிவேகமாக 10000 ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

உடைக்க முடியாது:
அந்த வரிசையில் 34 வயதில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரராக 75 சதங்கள் சாதனை படைத்துள்ள அவர் இன்னும் குறைந்தது இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடுவார் என்பதால் தொட முடியாது என்று கருதப்படும் சச்சின் 100 சதங்கள் சாதனையை நிச்சயம் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் 100 – 125 சதங்கள் அடிப்பார் என்று ஹர்பஜன் சிங், சோயப் அக்தர் போன்ற சில முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 100 சதங்கள் சாதனையை உடைத்தாலும் டெக்னிக்கல் அளவில் விராட் கோலியை விட சச்சின் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். அதை விட அதிகப்படியான நுணுக்கமும் உடல் தகுதியும் இருந்தால் மட்டுமே தொடக்கூடிய சச்சினின் 200 டெஸ்ட் போட்டிகள் சாதனையை விராட் கோலியால் உடைப்பது கடினம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எப்போதுமே டெக்னிக்கல் அளவில் நான் பார்த்த அல்லது எதிராக விளையாடிய வீரர்களில் சச்சின் மிகவும் சிறந்தவர் என்று சொல்லி வருகிறேன். இந்தியா அல்லது ஆஸ்திரேலியா என போட்டி எங்கு நடந்தாலும் நாங்கள் எவ்வளவு தரமான பந்து வீச்சு கூட்டணியுடன் எவ்வளவு அற்புதமான திட்டத்துடன் விளையாடினாலும் அவர் எப்போதும் அதை சமாளிக்கும் வழியை கண்டுபிடித்து விடுவார். எனவே வீரர்களை வரிசைப்படுத்துவது மிகவும் கடினமாகும். ஏனெனில் ஒவ்வொருவரும் தங்களுடைய விளையாட்டை வித்தியாசமாக விளையாடுகிறார்கள்”

Ponting

“ஆனாலும் நான் விளையாடிய சகாப்தத்தில் சச்சின் டெக்னிக்கல் அளவில் நான் பார்த்த சிறந்த வீரர் ஆவார். அத்துடன் நீங்கள் எவ்வளவு ரன்களை அடித்து எவ்வளவு சதங்களை அடித்தாலும் நல்ல நுணுக்கமும் உடல் அளவில் தகுதியும் இருந்தால் தான் 200 டெஸ்ட் போட்டிகள் என்ற அற்புதமான சாதனையை தொட முடியும்”

இதையும் படிங்க:IPL 2023 : 23 வயசுல கொஞ்சம் கூட ஃபிட்னஸ் இல்ல, அவர ட்ராப் பண்ணது கரெக்ட் தான் – இளம் இந்திய வீரரை விளாசிய சைமன் டௌல்

“அவை அனைத்தும் விராட் கோலிக்கு முன்பே சரியாகவே இருக்கிறது. அவர் நம்ப முடியாத வீரர் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை அவர் 70+ சதங்களை அடித்துள்ளார். சச்சின் அடித்துள்ள 100 சதங்களை அவர் அடிக்க மாட்டாரா? எனவே சச்சினுடன் ஒப்பிடுவது பற்றி விராட் கோலியின் கேரியர் முடியும் வரை நாம் காத்திருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement