IPL 2023 : 23 வயசுல கொஞ்சம் கூட ஃபிட்னஸ் இல்ல, அவர ட்ராப் பண்ணது கரெக்ட் தான் – இளம் இந்திய வீரரை விளாசிய சைமன் டௌல்

Simon Doull
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 5 தொடர் தோல்விகளை பதிவு செய்து ஆரம்பத்திலேயே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்தது. அந்த அணிக்கு ரிஷப் பண்ட் ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவாக அமைந்த நிலையில் 2016 ஐபிஎல் கோப்பையை வென்று அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரராக சாதனை படைத்த டேவிட் வார்னர் தலைமை தாங்கி வருகிறார்.

- Advertisement -

ஆனால் பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட அந்த அணிக்கு பேட்டிங் துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் பிரித்வி ஷா 12, 7, 0, 15, 0 என 5 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். குறிப்பாக அடித்து நொறுக்க வேண்டிய அவரை போலவே மிட்சேல் மார்ஷ், ரோவ்மன் போவல் என இதர பேட்ஸ்மேன்களும் சொதப்பியதால் மெதுவாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட டேவிட் வார்னர் பெரிய ரன்களை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து சேவாக் போன்ற முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுடன் தோல்விக்கான பழியை வாங்கிக் கொண்டார்.

ஃபிட்னெஸ் இல்ல:
இத்தனைக்கும் முதல் இன்னிங்ஸில் பொறுமையாக அமர்ந்து 2வது இன்னிங்ஸில் சேசிங் செய்வதற்கு புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் வகையில் இம்பேக்ட் வீரராக விளையாடும் வாய்ப்பை அவருக்கு டெல்லி நிர்வாகம் கொடுத்தது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிராக வெறும் 128 ரன்களை துரத்தும் போது மீண்டும் கொஞ்சமும் முன்னேறாமல் 13 (11) ரன்களில் நடையை கட்டிய அவர் பெரிய பின்னடைவை கொடுத்தார். நல்ல வேளையாக இலக்கு குறைவாக இருந்ததாலும் வார்னர் 57 (41) ரன்கள் எடுத்ததாலும் அந்தப் போட்டியில் டெல்லி கடைசி ஓவர் வரை போராடி முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதன் காரணமாக ஹைதெராபாத்துக்கு எதிரான 7வது போட்டியில் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டார். குறிப்பாக எத்தனை நாட்கள் பெரிய பெயரை மட்டும் வைத்துக் கொண்டு சுமாராக விளையாடுவீர்கள் என்று மைக்கேல் வாகன் விமர்சித்திருந்த நிலையில் அவர் கழற்றி விடப்பட்டுள்ளார். இந்நிலையில் 23 வயதுக்கு நிகரான ஃபிட்னஸ் இல்லாமல் தடுமாறும் பிரிதிவி ஷா டெல்லி அணியிலிருந்து நீக்கப்பட்டது சரிதான் என முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் விமர்சித்துள்ளார். எடுத்துக்காட்டாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் சோம்பேறித்தனமாக ரன் அவுட்டானதை குறிப்பிடும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதே பாதையில் நீங்கள் தொடர முடியாது. ஒருவேளை உங்களுக்கு எதுவும் நடைபெறவில்லையெனில் அதை மாற்றுவதற்கு நீங்கள் வேலை செய்ய வேண்டும். அந்த வகையில் அவர் தன்னுடைய மாற்றம் எங்கு செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது அவர் தேவையான அளவு அசத்ததில்லை. முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் வார்னருடன் விளையாடிய அவர் ரன் அவுட்டானார்”

Simon Doull

“அதாவது அபோட்டியில் மொத்த டெல்லி அணியும் முதல் இன்னிங்ஸ் ஃபீல்டிங் செய்த போது அவர் பெஞ்சில் அமர்ந்திருந்தார். ஆனால் அப்படி எந்த வேலையும் செய்யாமல் பேட்டிங் செய்ய களமிறங்கிய அவர் சோம்பேறித்தனமாக ஓடி ரன் அவுட்டானார். அது போன்ற சிறு விஷயங்கள் கூட உங்களை பெரிதாக வீழ்த்தி விடும். இந்த சீசனில் சுமாராக செயல்படும் அவருடைய ஃபிட்னஸ் சிறப்பாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதற்காக அவர் தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டதாகவும் எனக்கு தெரியவில்லை. அதற்கான பலனை அவர் தற்போது பெற்றுள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:CSK : கொல்கத்தாவில் சாதனையை நிகழ்த்தியது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவும் – சாதனை படைத்த சி.எஸ்.கே

முன்னதாக 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அசத்தினார். ஆனால் நாளடைவில் சிறப்பாக செயல்படாத அவர் இந்திய அணியிலிருந்து அதிரடியாக கழற்றி விடப்பட்ட நிலையில் மீண்டும் நிலையான இடத்தை பிடிக்க இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியும் இப்படி சொதப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement