CSK : கொல்கத்தாவில் சாதனையை நிகழ்த்தியது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவும் – சாதனை படைத்த சி.எஸ்.கே

Rahane
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது ஏப்ரல் மூன்றாவது வாரத்தை கடந்து மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது கடைசியாக நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

CSK

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த 32-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கினை நோக்கி எவ்வளவு போராடியும் இறுதியில் 186 ரன்களுக்கு ஆட்டம் இழக்க 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Rahane and Conway

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் மாபெரும் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது. அதன்படி ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அடித்துள்ள மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஈடன் கார்டன் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகவும் இந்த ரன்கள் அமைந்துள்ளன. அதோடு ஐபிஎல் வரலாற்றில் 26 முறை 200 ரன்களுக்கு மேல் அடித்த ஒரே அணி என்ற சாதனையை சிஎஸ்கே அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SRH vs DC : சொதப்பிய ஹைதராபாத், குறைந்த ஸ்கோரை அடித்தும் மேஜிக் நிகழ்த்திய டெல்லி – 15 சீசன்களில் இல்லாத சாதனை வெற்றி

இதனை தொடர்ந்து வரும் 27-ஆம் தேதி ஜெய்ப்பூர் மண்ணில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து தங்கள் எட்டாவது போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement