SRH vs DC : சொதப்பிய ஹைதராபாத், குறைந்த ஸ்கோரை அடித்தும் மேஜிக் நிகழ்த்திய டெல்லி – 15 சீசன்களில் இல்லாத சாதனை வெற்றி

SRH vs DC
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற 35வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடும் எதிரணிகள் இப்போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு முதல் ஓவரிலேயே பில் சால்ட் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்து களமிறங்கி அதிரடி காட்ட முயற்சித்த மிட்சேல் மார்ஷ் 5 பவுண்டரியுடன் 25 (15) ரன்களில் நடராஜன் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அதனால் மறுபுறம் நிதானத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட டேவிட் வார்னர் 21 (20) ரன்களில் நங்கூரத்தை போட முயன்ற போது அவுட்டாக்கிய வாஷிங்டன் சுந்தர் அதே ஓவரின் 4வது பந்தில் சர்ஃபாரஸ் கானை 10 (9) ரன்களிலும் கடைசி பந்தில் அமான் கானை 4 (2) ரன்களிலும்காலி செய்து ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதனால் 62/5 என தடுமாறிய டெல்லியை நிதானமாக செயல்பட்டு 6வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த அக்சர் படேல் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் 34 (34) ரன்கள் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சாதனை வெற்றி:
அவருடன் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட மனிஷ் பாண்டேவும் அடுத்த ஓவரிலேயே 34 (34) ரன்களில் ரன் அவுட்டானதால் டெல்லி 20 ஓவர்களில் 144/9 மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களும் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 145 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு தடுமாற்றமாக செயல்பட்ட ஹாரி ப்ரூக் 7 (14) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த மயங் அகர்வால் 7 பவுண்டரியுடன் 49 (39) ரன்களில் அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் நிதானமாக விளையாட முயற்சித்த அபிஷேக் ஷர்மா 5 (5) ரன்களிலும் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் திரிபாதி 15 (21) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். போதாகுறைக்கு அடுத்த ஓவரிலேயே கேப்டன் ஐடன் மார்க்கமும் 3 (5) ரன்களில் அவுட்டானதால் 85/5 என தடுமாறிய ஹைதராபாத்தை அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹென்றிச் க்ளாஸென் – வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அதிரடியாக விளையாடி மீட்டுடெத்தனர்.

- Advertisement -

குறிப்பாக 6வது டிக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து சரிவை சரி செய்த அந்த ஜோடியில் கடைசி 4 ஓவரில் 51 ரன்கள் தேவைப்பட்ட போது 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (19) ரன்கள் எடுத்து போராடிய க்ளாஸென் 31 (19) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மறுபுறம் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக செயல்பட்டதால் வெற்றியின் நெருங்கிய ஹைதராபாத்துக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது அசத்திய முகேஷ் குமார் 2, 0, 1, 1, 1, 0 என வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

அதனால் சுந்தர் 24* (15) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 137/6 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் போராடி தோற்றது. மறுபுறம் குறைந்த ஸ்கோரை கட்டுப்படுத்தும் அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய டெல்லி சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் மற்றும் அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

முன்னாதாக இப்போட்டியில் 160 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய டெல்லியை பந்து வீச்சில் மடக்கி பிடித்த ஹைதராபாத் சிறப்பாகவே செயல்பட்டது. ஆனால் பேட்டிங்கில் வெறும் 145 ரன்களை துரத்தும் போது மயங் அகர்வால் தவிர டாப் ஆர்டரில் எஞ்சிய அனைத்து பேட்ஸ்மேன்களும் 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்து பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: வீடியோ : ஸ்லெட்ஜிங் எல்லாம் வாய் வார்த்தை மட்டும் தாங்க, சண்டைன்னா எனக்கு ரொம்ப பயம் – ஓப்பனாக பேசிய விராட் கோலி

அதனால் கடைசியில் சுந்தர் – க்ளாஸென் போராடியும் வெற்றி காண முடியாத அளவுக்கு பந்து வீச்சில் அசத்திய டெல்லி தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக 2008இல் டேர்டெவில்ஸ் என்ற பெயரில் துவங்கி தற்போது கேப்பிட்டல்ஸ் என்ற பெயருடன் விளையாடும் டெல்லி கடந்த 15 வருடங்களில் முதல் முறையாக 150க்கும் குறைவான இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனை வெற்றி பெற்றது. இதற்கு முன் சேவாக், கம்பீர் போன்ற கேப்டன்கள் தலைமையில் கூட டெல்லி 150க்கும் குறைவான இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதில்லை.

Advertisement