சச்சினை விட இந்திய அணிக்கு சிறந்த ஓப்பனர் இவர்தான். என்னுடைய தேர்வு இதுதான் – சைமன் டால் கணிப்பு

Doull
- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர். தனது 16 வயதுமுதல் கிட்டத்தட்ட 40 வயது வரை பல சாதனைகளை குவித்து தொடர்ந்து ஆடி வந்தார். 200 டெஸ்ட் போட்டிகள் 460 ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் அதிகபட்சமாக ஆடியிருக்கிறார். கிட்டத்தட்ட 36 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச அளவில் இது மிகப்பெரிய சாதனையாகும்.

sachin

- Advertisement -

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் சர்மா தான் சிறந்த துவக்க வீரர் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா கடந்த காலத்தைவிட தற்போது நன்றாக ஆடி வருகிறார். 70, 80, 90 ரன்களை தாண்டிய பின்னரும் பதற்றம் அடையாமல் சதம் விளாசுகிறார்.

இந்திய அணியை பொறுத்தவரை எல்லா காலகட்டத்திலும் அவர்தான் சிறந்த துவக்க வீரர். சச்சின் டெண்டுல்கரை விட இவர் தான் சிறந்த துவக்க வீரர்.புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் ரோகித் சர்மா தன் சச்சினை விட சிறந்தவர் என்று கூறியுள்ளார் அவர். ரோகித் சர்மா கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக துவக்க வீரராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Doull 1

தற்போது வரை ரோஹித் சர்மா 9000 ரன்களை குவித்துள்ளார். மேலும், மூன்று இரட்டை சதங்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பாக முதல் இரட்டைசதத்தை சச்சின் பதிவு செய்தாலும் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதத்தினை பதிவு செய்துள்ளார். மேலும் சச்சின் சதத்தை நெருங்கும்போது அதிகப்பந்துகளை எடுத்துக்கொள்வார்.

ஆனால் ரோஹித் சர்மா அப்படி இல்லை சதத்தை நெருங்கும்போதும் சரி, சதத்தை கடந்த பின்னரும் சரி அதிரடியில் வெளுத்துவாங்குவார். இவரின் இந்த அதிராடிக்காகவே ரோஹித்துக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக பார்த்தாலும் சரி ஒருநாள் கிரிக்கெட்டில் 48 ரன்கள் சராசரி மற்றும் 88 ஸ்ட்ரைக்ரேட் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement