சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 43 வயதை எட்டியுள்ளதால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. அதோடு அன் கேப்டு வீரராக நான்கு கோடி ரூபாய்க்கு தோனி தக்கவைக்கப்பட்டாலும் அடுத்த சீசனில் இம்பேக்ட் வீரராகவே களமிறங்குவார் என்ற தகவலும் பெருமளவு பரவி வருகிறது.
தோனியின் இடத்தை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்வார் :
இதன் காரணமாக தோனியின் இடத்தை பூர்த்தி செய்யும் ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது. அந்த வகையில் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்து அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் டெல்லி அணி நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக ரிஷப் பண்ட் அந்த அணியிலிருந்து வெளியேறி மெகா ஏலத்தில் கலந்து கொள்வார் என்று கடந்த சில வாரங்களாகவே பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் அவ்வாறு ரிஷப் பண்ட் ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் அவர் பெரிய தொகைக்கு ஏலத்தில் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான சைமன் டவுள் தோனியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான இடத்தை ரிஷப் பண்ட்டால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
சென்னை அணி முதல் 3 வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரானா ஆகியோரை தக்க வைக்கும் என்று நினைக்கிறேன். அதே வேளையில் தோனியின் இடத்தை பூர்த்தி செய்யும் ஒரு வீரரையும் அவர்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அப்படி ரிஷப் பண்ட் ஏலத்தில் பங்கேற்கும் பட்சத்தில் நிச்சயம் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அவரை ஏலத்தில் எடுக்க சென்னை அணி நிச்சயம் முயற்சிப்பார்கள்.
இதையும் படிங்க : சொல்லியும் கேட்கலல்ல.. 12 வருஷ தோல்விக்கு ரஹானே கேரியரை முடிச்ச இதான் காரணம்.. ஹர்பஜன் விளாசல்
ஏனெனில் தோனியை போன்று விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய மேட்ச் வின்னராக செயல்பட கூடியவர். அதன் காரணமாக அவரை எவ்வளவு பெரிய தொகைக்கும் ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி தயக்கம் காட்டாது என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



