இந்திய அணிக்கு எதிரா ஆஸ்திரேலியா இதை மட்டும் பண்ணவே முடியாது – சைமன் டவுல் ஓபன்டாக்

Simon-Doull
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதன்படி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியால் 177 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 400 ரன்களை குவித்து அசத்தியது.

IND vs AUS

- Advertisement -

அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியின் மூன்றாவது நாளிலேயே ஆஸ்திரேலியா அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரானது எந்த எண்ணிக்கையில் முடிவடையும் என்பது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான சைமன் டவுல் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Steve Smith 1

ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆஸ்திரேலியா அணியால் இம்முறை இந்திய அணியை வீழ்த்தவே முடியாது என்று நினைக்கிறேன். மழை மட்டும் வராமல் இருந்தால் இந்த தொடரை இந்திய அணி நான்குக்கு பூஜ்யம் (4-0) என்ற கணக்கில் வெற்றி பெறும். ஒருவேளை ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் :

- Advertisement -

அந்த போட்டியில் ஸ்மித் மற்றும் லாபுஷேன் ஆகிய இருவர் மட்டும் தான் அந்த அணியை காப்பாற்ற முடியும். மற்றபடி இந்திய அணியை அவர்களால் வீழ்த்த வாய்ப்பே இல்லை என்று சைமன் டவுல் வெளிப்படையான கருத்தினை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2004-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றாத வேளையில் இம்முறையாவது கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் போட்டியிலேயே அவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இதையும் படிங்க : IND vs AUS : 2 ஆவது டெஸ்ட் போட்டியில் கண்டிப்பா இவர் விளையாட வாய்ப்பிருக்கு – ராகுல் டிராவிட் வெளிப்படை

இருப்பினும் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை கைப்பற்ற எங்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement