IND vs AUS : 2 ஆவது டெஸ்ட் போட்டியில் கண்டிப்பா இவர் விளையாட வாய்ப்பிருக்கு – ராகுல் டிராவிட் வெளிப்படை

Rahul-Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஷ்ரேயாஸ் ஐயர் பிட்டாக இருந்தால் கண்டிப்பாக நேரடியாக பிளேயிங் லெவனில் விளையாடுவார் என்று உறுதி செய்துள்ளார். இது குறித்து பேசிய டிராவிட் கூறுகையில் : இன்னும் இரண்டு நாட்கள் பயிற்சி மீதம் இருக்கிறது. இன்றைய பயிற்சியில் ஷ்ரேயாஸ் ஐயர் நீண்ட நேரம் விளையாடினார்.

Shreyas Iyer

அதேபோன்று நாளை முழுவதும் அவர் எவ்வாறு பயிற்சியை மேற்கொள்கிறார் என்பதை கண்காணிக்க உள்ளோம். அதன்படி அவர் விளையாடும் அளவிற்கு ஃபிட்டாக இருந்தால் கண்டிப்பாக அவர் நேரடியாக பிளேயிங் லெவனனில் இருப்பார். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை என டிராவிட் உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இணையும் பட்சத்தில் சூரியகுமார் யாதவ் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பது உறுதி. இந்திய அணிக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 624 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் கட்டாயம் இந்திய மைதானங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதனால் அவர் விளையாடுவதை யாராலும் மறுக்க முடியாது.

இதையும் படிங்க : IND vs AUS : லேப்டாப்ல அவரோட பவுலிங்க பார்த்து கத்துக்கிட்டு இருக்கேன் – இந்திய வீரரை ஓப்பனாக பாராட்டும் நேதன் லயன்

அதேபோன்று கடந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது ரோஹித் சர்மாவை தவிர்த்து மிடில் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ் பரத் என யாருமே மிடில் ஆர்டரில் ரன் குவிக்கவில்லை என்பதாலும் ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்குள் இணைவது அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement