கண்டிப்பா இவருக்கு சீக்கிரம் ஐ.பி.எல் வாய்ப்பு கிடைக்கும் பாருங்க – இலங்கை பயிற்சியாளர் நம்பிக்கை

Silverwood
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான 10 அணிகளும் தற்போது தங்களுக்கு தேவையான வீரர்களை மினி ஏலத்தில் எடுத்து மேலும் தங்களது அணியை பலப்படுத்திக் கொண்டு எதிர்வரும் இந்த தொடருக்காக காத்திருக்கின்றனர்.

Auction

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடந்த மாதம் கொச்சியில் நடைபெற்ற மினி ஏலத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டனர். அதில் 80-க்கு மேற்பட்ட வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட வேளையில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் கிடைக்காதது பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

அந்த வகையில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா 50 லட்சத்திற்கு தனது பெயரை அடிப்படை விலைக்கு பதிவு செய்திருந்தாலும் அவரை எந்த ஒரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷனகா இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு விரைவில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரிஸ் சில்வர்வுட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

தசுன் ஷனகா தன்னிடம் உள்ள திறமை என்ன என்பதை உலகிற்கு காண்பித்து விட்டார். அதிரடியாக விளையாடக்கூடிய அவர் நிச்சயம் இனி வரும் சீசன்களில் ஐபிஎல் அணிகளின் கவனத்திற்கு சென்று கட்டாயம் அவர் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்து விளையாடுவார் என தான் உறுதியாக நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கே.எல் ராகுல் கிட்ட இருக்குற மிகப்பெரிய பிரச்சனையே இது மட்டும் தான் – முகமது அசாருதீன் கருத்து

கடந்த மாதம் கொச்சியில் நடைபெற்ற இந்த மினி ஏலத்தில் 50 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு ஆல் ரவுண்டாக தனது பெயரை பதிவு செய்து இருந்த இவரை ஏலத்தில் எடுக்காமல் விட்டது தவறு என்று கௌதம் கம்பீர் கூட தனது கருத்தினை சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement