கே.எல் ராகுல் கிட்ட இருக்குற மிகப்பெரிய பிரச்சனையே இது மட்டும் தான் – முகமது அசாருதீன் கருத்து

Azharuddin
- Advertisement -

இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த இளம் வீரர் கே.எல் ராகுல் சமீபகாலமாகவே மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக தவித்து வருகிறார். நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரிலும் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு அதற்கு பின்னர் சில தொடர்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் பொறுப்பையும் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அவரிடம் இருந்து பறித்து ஹார்டிக் பாண்டியாவிற்கு கொடுத்துள்ளது.

KL Rahul

- Advertisement -

ஒரு பக்கம் கே.எல் ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர மறுபுறம் பாண்டியா கேப்டன்ஷிப்பில் அசத்தி வருகிறார். எனவே எதிர்கால கேப்டனாகவும் அவர்தான் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தனது இடத்தை இழக்க இருக்கும் அபாயத்தில் உள்ள கே.எல் ராகுல் இலங்கை அணிக்கு எதிரான ஒர நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறார்.

ஒருவேளை இந்த தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் எதிர்வரும் தொடர்களில் அவரது இடம் கேள்விக்குறியாகும். எனவே கே.எல் ராகுல் இந்த சரிவிலிருந்து எவ்வாறு மீள வேண்டும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் கே.எல் ராகுல் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

KL-Rahul

கே.எல் ராகுல் மிகச் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் அவரிடம் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மை இல்லை. ஆனால் இதனை அவர் அவரால் சரி செய்ய முடியும். தொடர்ச்சியாக கே.எல் ராகுல் ரன்களை குவித்து சீராக பயணிக்க வேண்டும் எனில் கட்டாயம் இந்த நேரத்தில் அவருக்கு உதவ பயிற்சியாளர்கள் தான் முன்வர வேண்டும்.

- Advertisement -

அவரின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்தாலும் அவருடைய ஷாட் செலெக்சன் மற்றும் பந்தினை எங்கு அடிக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் அவருடைய பிரச்சினைக்கு தீர்வினை பயிற்சியாளர்கள் வழங்க வேண்டும். ராகுல் விரைவில் ஆட்டமிழப்பதற்கு காரணமே அவருடைய தவறான ஷாட் செலக்சன் தான். அதனை மட்டும் அவர் சரி செய்து கொண்டால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அசாருதீன் கூறினார்.

இதையும் படிங்க : IND vs SL : ஈஸியான வெற்றிக்கு இவ்வளவு அக்கப்போரா – சாதகமான நிலையை பயன்படுத்தி ராகுல் ஹீரோவானது எப்படி

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தான் முக்கிய வீரர்களாக திகழ்வார்கள் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement