IND vs SL : ஈஸியான வெற்றிக்கு இவ்வளவு அக்கப்போரா – சாதகமான நிலையை பயன்படுத்தி ராகுல் ஹீரோவானது எப்படி

IND vs SL Rahul Rohit
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 12ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அவிஷ்கா பெர்னான்டோ 20 (17) ரன்களில் முகமது சிராஜ் வேகத்தில் ஆட்டமிழந்து சென்றார்.

இருப்பினும் அடுத்து வந்த குசால் மெண்டிஸ் மற்றொரு தொடக்க வீரர் நுவனிடு பெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தாலும் குல்தீப் யாதவ் சுழலில் 34 (34) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைக்கு வந்த டீ சில்வா கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் நங்கூரமாக செயல்பட்ட பெர்னாண்டோ அரைசதம் கடந்து 50 (63) ரன்கள் குவித்து அவசரப்பட்டு ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

போராட்ட வெற்றி:
அடுத்த சில ஓவர்களில் இலங்கையின் கேப்டன் மற்றும் நம்பிக்கை நாயகன் சனக்காவை 2 (4) ரன்களில் அவுட்டாக்கிய குல்தீப் யாதவ் மற்றொரு முக்கிய வீரர் அசலங்காவையும் 15 (21) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் 126/6 என சரிந்த அந்த அணி 200 ரன்களை தொடுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் கவலையடைந்த போது ஹசரங்கா 21, வெல்லலேகே 32, கருணாரத்னே 17, ரஜிதா 17* என டெயில் எண்டர்கள் கணிசமான ரன்களை குவித்து காப்பாற்றினாலும் 39.4 ஓவர்களில் இலங்கை 215 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 216 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17 (21) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் 5 பவுண்டரியுடன் அதிரடி காட்டிய சுப்மன் கில் 21 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2 ரன்னில் போல்டாகி ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்த சில ஓவர்களில் நங்கூரமாக விளையாட முயன்ற ஷ்ரேயாஸ் ஐயர் 28 (33) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதனால் 86/4 என சரிந்த இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியான நிலையில் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் – ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிக பந்துகள் கையிருப்பு இருந்ததை பயன்படுத்தி விக்கெட்டை விடாமல் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 15வது ஓவரில் இணைந்து 35வது ஓவர்கள் வரை நங்கூரமாக செயல்பட்ட இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு முக்கியமான 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்த போது 4 பவுண்டரிகளுடன் ஹர்திக் பாண்டியா 36 (53) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த அக்சர் பட்டேல் அழுத்ததைப் பற்றி கவலைப்படாமல் 1 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டாலும் 21 (21) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து கடைசி நேரத்தில் ஆட்டமிருந்தார். இருப்பினும் நன்கு செட்டிலாகி நங்கூரமாக விளையாடிய ராகுல் தமக்கு மிகவும் பிடித்த தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்துவதற்கு நல்ல சூழல் கிடைத்ததை பயன்படுத்தி அரை சதம் கடந்து 6 பவுண்டரியுடன் 64* (103) ரன்களை 62.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து வெற்றி பெற வைத்து ஹீரோவானார்.

- Advertisement -

கூடவே குல்தீப் யாதவ் 2 பவுண்டரியுடன் 10* (10) ரன்கள் எடுத்ததால் 43.2 ஓவரில் 219/6 ரன்களை எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. இலங்கை சார்பில் லகிரு குமாரா கருணரத்னே அதிகபட்சமாக தலா 2 விக்கெட் எடுத்தனர். இப்போட்டியில் பவுலிங்க்கு சாதகமான இருந்த பிட்ச்சில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து 250 ரன்களை கூட எடுக்க தவறியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இதையும் படிங்கஉங்களுக்கு இதே வேலையா? ரோகித்துடன் ஒப்பிட்டு பாண்டிங்கை மட்டமாக பேசிய கம்பீர் – ஆதாரத்துடன் ரசிகர்கள் பதிலடி

மறுபுறம் அந்தளவுக்கு பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்டு கட்டுப்படுத்திய இந்தியா பேட்டிங்கில் தடுமாறினாலும் இலக்கு குறைவாக இருந்ததால் எப்போதுமே எகிறாமல் கட்டுக்குள்ளேயே இருந்த ரன் ரேட்டை பயன்படுத்தி வெற்றி கண்டது. இந்த வெற்றியால் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் தன்னை வலுவான அணி என்பதை நிரூபித்து 2023 உலக கோப்பையை வெல்லும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

Advertisement