
இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய ஜிம்பாப்வே அணியானது இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தாலும் அடுத்தடுத்து நான்கு தோல்விகளை சந்தித்து இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்துள்ளது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியிடம் முற்றிலுமாக சரணடைந்த ஜிம்பாப்வே அணியானது பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது.
அந்த வகையில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹராரே நகரில் ஜூலை 14-ஆம் தேதி நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது.
பின்னர் 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் இந்த தொடரில் விளையாடிய விதம் குறித்தும், தோல்வி குறித்தும் பேசியிருந்த சிக்கந்தர் ராசா கூறுகையில் :
உண்மையிலேயே இந்த தொடரில் எங்களது அணியின் சார்பாக வேகப்பந்து வீச்சாளரான பிளசிங் முஸாபரணி மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனாலும் நாங்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அதுவே நாங்கள் இந்த தொடரை இழக்க காரணம். இன்னும் பீல்டிங்கில் முன்னேற்ற வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன.
இந்த தொடரில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடத்தினை வைத்து எதிர்காலத்தில் நாங்கள் செய்யும் சில தவறுகளை திருத்த இந்த தோல்வி எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த தொடரில் எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் நாங்கள் மிகப்பெரிய சறுக்களை சந்தித்தோம். என்னுடைய பணிச்சுமையை நான் பார்த்துக் கொள்ள வேண்டிய வேலை இருக்கிறது.
இதையும் படிங்க : பர்ஸ்ட் மேட்ச்ல தோத்ததுக்கு அப்புறம் நாங்க பண்ண இந்த விஷயம் அசத்தலா இருந்தது.. தொடர் வெற்றி குறித்து – கில் மகிழ்ச்சி
ஏனெனில் என்னுடைய தோள்பட்டை 100% முழு திறனுடன் இல்லை. எனக்கு சிறிய அளவிலான காயம் இருக்கிறது. எனவே நான் என்னுடைய பணிச்சுமையை கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னதாக நான் இன்னும் சில தினங்களில் “ஹண்ட்ரெட்” தொடருக்காக செல்ல உள்ளேன். அதன்பிறகு மீண்டும் ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என சிக்கந்தர் ராசா கூறியது குறிப்பிடத்தக்கது.