இந்திய அணியில் நீ ஒரு லெஜன்ட். நீ தான் சிட்னி போட்டியின் நாயகன் – இந்திய வீரரை பாராட்டிய சித்தார்த்

Siddharth
- Advertisement -

சிட்னியில் நடைப்பெற்ற மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் 338 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிஸ்சில் 312ரன்கள் குவித்தது. அதன்பிறகு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்து டிரா செய்தது.

Ashwin

- Advertisement -

இறுதி நாள் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் 97 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட்டுடன் இணைந்து புஜாராவும் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். இதையடுத்து இணைந்த அஸ்வின், விகாரி ஜோடி தேனீர் இடைவெளிக்கு பின் வெற்றி அடைய முடியாது என்றதால் விக்கெட்களை இழக்காமல் போட்டியை ட்ரா செய்தனர்.

தோற்று விடுவோம் என்ற கட்டத்தில் இருந்த இந்திய அணியை விஹாரி மற்றும் அஷ்வின் ஆகியோர் இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் விளையாடி தோல்வியில் இருந்து மீட்டனர். இந்த போட்டியில் அஸ்வின் 128 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை விளாசினார். அஷ்வினின் இந்த சிறப்பான ஆட்டம் தற்போது பலராலும் பாராட்டப்படுகிறது.

ashwin 1

எனவே இந்திய பேட்ஸ்மேன்களின் இந்த சிறப்பான ஆட்டத்தை கண்டு கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட அனைவரும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுபோக ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். தற்போது தமிழ் திரைப்பட நடிகரான சித்தார்த் அஸ்வினை தனது டுவிட்டர் பக்கத்தில் மனதார பாராட்டியுள்ளார். சித்தார்த் தனது டுவிட்டரில் இதுகுறித்து பதிவிட்ட பதிவில் :

“நீ ஒரு லெஜன்ட், நீ தான் இந்த போட்டியின் நாயகன்..அவலோதான் மச்சி ” என்று அஸ்வினை புகழ்ந்து இருக்கிறார். சித்தார்த்தின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement