விராட் கோலி மாதிரி 3 ஃபார்மட்லயும் அவர் தான் இந்தியாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் – இளம் வீரரை பாராட்டும் வாசிம் ஜாபர்

Jaffer
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சிறப்பாக பேட்டிங் செய்த இந்தியா 513 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்தியாவுக்கு 2 இன்னிங்ஸ்களிலும் சீனியர் புஜாரா 90, 102* என பெரிய ரன்களை குவித்த நிலையில் காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்களில் அவுட்டானாலும் 2வது இன்னிங்ஸில் அபாரமாக செயல்பட்டு சதமடித்து 110 ரன்கள் விளாசினார். கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் நிலையற்ற வாய்ப்புகளுக்கு மத்தியில் 3 வருடங்கள் கழித்து தனது முதல் சதத்தை விளாசி அசத்தியுள்ளார்.

Shubman Gill Century

- Advertisement -

கடந்த 2018ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று 2019 ஐபிஎல் தொடரில் வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருதையும் வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான சுப்மன் கில் ஆரம்பத்தில் தடுமாறியதுடன் காயத்தால் வெளியேறினார். அதன் பின் 2021ஆம் ஆண்டு இந்தியா பதிவு செய்த வரலாற்று சிறப்புமிக்க காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் மீண்டும் காயங்களாலும் சீனியர் வீரர்கள் வந்ததாலும் நிலையான வாய்ப்புகளை பெறவில்லை.

3 பார்மட் பிளேயர்:

இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வந்த அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்து முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல உதவியதால் மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் முதல் முறையாக சதமடித்து அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று இந்தியா அடுத்தடுத்த வைட்வாஷ் வெற்றிகளை சுவைக்க முக்கிய பங்காற்றிய அவர் தற்போது கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ளார்.

Shuman Gill

அப்படி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் சுப்மன் கில் வருங்காலங்களில் விராட் கோலிக்கு பின் 3 வகையான இந்திய அணியிலும் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவார் என்று முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் சதமடித்துள்ளது மிகவும் நல்லது. இதற்கு முன்பே சதமடிக்க வேண்டிய அவர் சில வாய்ப்புகளை தவறவிட்டார்”

- Advertisement -

“இருப்பினும் ஒரு வழியாக அந்த குரங்கு அவரது பையில் வந்து சேர்ந்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் கிளாஸ் பிளேயர். அனேகமாக விராட் கோலிக்கு பின் இந்திய கிரிக்கெட்டில் அவர் பெரிய அளவில் உருவெடுப்பார். என்னைப் பொறுத்த வரை அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடும் திறமை பெற்றவர். அவரிடமிருந்து இன்னும் நிறைய நல்ல இன்னிங்ஸ்களை நான் எதிர்பார்க்கிறேன்”

Jaffer

“மேலும் அடுத்த போட்டியில் ரோகித் சர்மா வந்தாலும் அவர் தனது மாநில அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். அந்த இடத்தில் விளையாடிய அனுபவம் அவரிடம் நிறைய உள்ளது. எனவே தொடக்க வீரராக தற்போது விளையாடும் அவருக்கு நீங்கள் மிடில் ஆர்டரில் வாய்ப்பு கொடுத்தாலும் அவருக்கு பெரிய அழுத்தம் ஏற்படாது. ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தொடக்க ஆட்டக்காரராக பயன்படுத்தினால் அவர் புதிய ஆடுகளத்தில் கடினமான புதிய பந்தை விளையாட பழகியிருக்க மாட்டார் என்பதால் அது ஒரு வழியில் சிக்கலை ஏற்படுத்தும்”

இதையும் படிங்கவீடியோ : அதனால் தான் நீங்க லெஜெண்ட், நேரலையில் பேட்ஸ்மேன் அவுட்டாவதை முன்பே கணித்த பாண்டிங் – ரசிகர்கள் வியப்பு

“ஆனால் இவர் ஏற்கனவே அங்கு விளையாடி பழகியுள்ளதால் 5வது இடத்திலும் பொருந்துவார் என்று நான் நினைக்கிறேன். ஒரு தொடக்க ஆட்டக்காரராக நீங்கள் பெரிய இன்னிங்ஸ்களை விளையாடும் போது பழைய பந்தையும் ஸ்பின்னர்களையும் எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால் அவர் எளிதில் மிடில் ஆர்டரிலும் விளையாட பழகி விடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement