- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இப்படி ஒரு அணியை தலைமை தங்குவதில் மகிழ்ச்சி.. வெ.இ அணியை வீழ்த்தியது குறித்து – சுப்மன் கில் பேட்டி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியின் ஐந்தாம் நாளான இன்று இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியை தலைமை தூங்குவதில் மகிழ்ச்சி : சுப்மன் கில்

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

- Advertisement -

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 248 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்களை குவித்தது.

அதன் காரணமாக 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது வெற்றி பெற்றது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கி வழி நடத்துவது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. இந்த தொடரில் எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமான நேரங்களில் சரியான முடிவுகளை இந்த இரண்டு போட்டிகளிலும் எடுத்ததாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. உங்களுக்கு கண்டிப்பா அந்த சான்ஸ் தேடி வரும்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு – கைப் ஆறுதல்

சில சமயங்களில் தைரியமான முடிவுகள் போட்டியின் முடிவுகளை மாற்றும். அந்த வகையில் இந்த தொடரில் முக்கிய சில முடிவுகளை எடுத்ததாக கருதுகிறேன். இந்த போட்டியை பொருத்தவரை 300 ரன்கள் வரை நாங்கள் முன்னிலை பெற்றதால் எங்களால் எளிதாக வெல்ல முடிந்தது என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -