இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது :
சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது குறித்து பேசிய : சுப்மன் கில்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது. பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 82 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : டாசில் சொன்னது போலவே இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஏனெனில் இந்த மைதானம் 170 ரன்கள் வரை அடித்தாலே போட்டிக்கு சாதகமான முடிவு கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது.
ஏனெனில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சவாலாக இருந்தால் சிறப்பாக பந்துவீசும் அணி வெற்றி பெறும் என்று நினைத்தோம். அந்த வகையிலே இந்த போட்டியில் 160 – 170 ரன்கள் வரை குவிக்க நினைத்தோம். வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி எங்களை 170 ரன்களுக்கு அருகில் வரை கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க : மாபெரும் சாதனையுடன் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி – விவரம் இதோ
மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டுகளை தொடர்ச்சியாக எடுத்ததால் எங்களுக்கு எளிதான வெற்றி கிடைத்தது. இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை தடுத்து நிறுத்தினர் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



