மாபெரும் சாதனையுடன் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி – விவரம் இதோ

GT
- Advertisement -

அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது :

சாதனையுடன் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் :

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும் குவித்தனர். சன்ரைசர்ஸ் அணி சார்பாக பிரபுல் ஹிங்கே மற்றும் சாஹிப் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 82 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி பிரமாதமான வெற்றியை பெற்றது.

இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக காகிஸோ ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் குஜராத் அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் மாபெரும் சாதனை ஒன்றினையும் ஐ.பி.எல் போட்டிகளில் நிகழ்த்தி அசத்தியுள்ளது. அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : ஹென்றிச் கிளாசனை பின்னுக்கு தள்ளி அமர்களப்படுத்திய சாய் சுதர்சன் – விவரம் இதோ

ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை குஜராத் அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெற்ற வெற்றியே சாதனையாக இருந்து வந்தது. இவ்வேளையில் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement