ஹென்றிச் கிளாசனை பின்னுக்கு தள்ளி அமர்களப்படுத்திய சாய் சுதர்சன் – விவரம் இதோ

Sai Sudharsan and Klaasen
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியானது அகமதாபாத் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகின்றன. அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஹென்றிச் கிளாசனை பின்னுக்கு தள்ளிய சாய் சுதர்சன் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும் குவித்தனர். சன் ரைசர்ஸ் அணி சார்பாக பிரபுல் ஹிங்கே மற்றும் ஷாகிப் ஹுசேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணியின் துவக்க வீரராக விளையாடிய சாய் சுதர்சன் 44 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 61 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

அவர் இந்த போட்டியில் 54 ரன்கள் எட்டிய போது சன் ரைசர்ஸ் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான ஹென்றிச் கிளாசனை பின்னுக்கு தள்ளி நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தினார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : இஷான் கிஷன் இந்த விடயத்தில் என்னுடன் போட்டியில் தான் இருக்கிறார்.. ஒப்புக்கொண்ட – சஞ்சு சாம்சன்

இந்த போட்டியின் போது 54 ரன்களை அவர் எட்டிய வேளையில் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இருந்த ஹென்றிச் கிளாசினை (494) அவர் பின்னுக்கு தள்ளினார். ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் அவர் 61 ரன்களை அடித்ததன் மூலம் தற்போது சாய் சுதர்சன் 502 ரன்கள் அடித்து நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement