இந்திய டி20 அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தற்போது சஞ்சு சாம்சன் இருந்து வருகிறார். நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற போது ஆரம்பகட்ட போட்டிகளில் சஞ்சு சாம்சன் தடுமாறிய வேளையில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் மீண்டும் தனது இடத்தை பிடித்த அவர் தற்போது முதன்மை துவக்க வீரராக நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
இஷான் கிஷனுடனான போட்டி குறித்து பேசிய சஞ்சு சாம்சன் :
நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கடைசி கட்ட சுற்று போட்டிகளின் போது வெற்றி பெறுவதற்கு சஞ்சு சாம்சன் மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். எனவே இன்னும் சில ஆண்டுகள் அவரே இந்திய அணியின் துவக்க வீரராக இருப்பார் என்பது உறுதி.
தற்போது 2026 ஐ.பி.எல் போட்டிகளில் சி.எஸ்.கே அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் அசத்தலான பார்மில் விளையாடி வருகிறார். அதேபோன்று ஹைதராபாத் அணியில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி விளையாடி வரும் இஷான் கிஷனும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்திய டி20 அணியில் தன்னுடைய இடத்தை பிடிப்பதற்கு இஷான் கிஷன் போட்டியிடுகிறார் என வெளிப்படையாக சஞ்சு சாம்சன் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : யாருமே எதிர்பாராத விதமாக இஷான் கிஷன் இந்திய அணிக்குள் வந்தார். சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். அந்த தொடரில் அவர் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இருந்து கோப்பையும் வென்று கொடுத்தார்.
இதையும் படிங்க : விராட் கோலியிடம் இருந்து தான் அதை நான் கத்துக்கிட்டேன்.. அவர் ஆல் டைம் கிரேட் – க்ருனால் பாண்டியா ஓபன்டாக்
நான் எவ்வாறு கடினமாக உழைத்து இருக்கிறேனோ அதேபோன்று அவரும் கடினமாக உழைத்து அணிக்குள் வந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் அணியில்லாமல் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தற்போது மீண்டும் இடம்பெற்று ரன்களையும் குவித்து வருகிறார். அவர் இந்திய டி20 அணியில் என்னுடைய இடத்தை குறி வைக்கிறார் என்பதை கேமராக்கு முன்னால் என்னால் சொல்ல முடியும் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



