இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலிமையான நிலையில் உள்ளது.
விராட் கோலியுடன் விளையாடுவது குறித்து பேசிய க்ருனால் பாண்டியா :
தங்களது அணியில் வெகு சில மாற்றங்களை மட்டுமே செய்துள்ள ஆர்.சி.பி அணி தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் இந்த ஆண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதே பலரது நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது. இந்த தொடரை பொறுத்தவரை பெங்களூரு அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் க்ருனால் பாண்டியா பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே மிகப்பெரிய அளவில் கை கொடுத்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக மும்பை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் காயத்துடன் போராடி 46 பந்துகளில் 73 ரன்கள் குவித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவிய க்ருனால் பாண்டியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவும் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். அந்த போட்டியில் அவரது போராட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள போட்டி ஒன்றில் தான் இவ்வாறு போராட்ட குணத்துடன் விளையாடுவதற்கு காரணம் விராட் கோலி தான் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலியை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் பயிற்சியின் போதும் சரி, போட்டியிலும் சரி மிக தீவிரமாக செயல்படக்கூடியவர்.
இதையும் படிங்க : எம்.எஸ் தோனி சி.எஸ்.கே அணியுடன் பயணம்.. எந்த போட்டியில் பங்கேற்கிறார் தெரியுமா? – விவரம் இதோ
அவரது தலைமையின் கீழ் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறேன். அவருக்கு எதிராகவும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். தற்போது அவருடன் இணைந்தும் விளையாடி விளையாடி வருகிறேன். விராட் கோலியின் கண்கள் எப்போதும் பொய் சொல்லாது. எப்போதுமே வெற்றிக்கான வேட்கையுடன் அந்த பசியுடன் அவர் விளையாடுவது நம்ப முடியாதது. அவரிடம் இருக்கும் அந்த வெற்றி வேட்கையை நானும் அவரை பார்த்து கற்றுக் கொண்டேன் எனவே வெற்றிக்காக முழு மனதுடன் ஒவ்வொரு போட்டியிலும் போராடுவேன் என க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



