
அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டியில் சொந்த மண்ணில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 10 போட்டிகளில் 6 ஆவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் பஞ்சாப் அணி இந்த தொடரில் தங்களது இரண்டாவது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது :
இந்த சேசிங் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனாலும் நாங்கள் இறுதிவரை இந்த போட்டியை கொன்று சென்றிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இருப்பினும் கடைசியில் எங்களுக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தப் போட்டி 15-16 ஓவர்களில் இலக்கை எட்டக்கூடிய போட்டியாக அமையாது என்று நினைத்தோம். ஏனெனில் மைதானம் சற்று மெதுவாக இருந்ததால் பந்து நின்று வந்தது.
இதையும் படிங்க : குஜராத் அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுதான் காரணம் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன்டாக்
எனவே எந்த ஒரு வீரரும் முதல் பந்தில் இருந்தே நிச்சயம் அதிரடியாக விளையாட முடியாது என்பது எங்களுக்கு தெரியும். அதேபோன்று ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை நிலைத்து நின்று விளையாடினால் நிச்சயம் எல்லைக்கோட்டை கடக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. அந்த வகையில் வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பாக விளையாடி எங்கள் அணிக்கு வெற்றி தேடித்தந்தார் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.