
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 53 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 35 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடுகையில் போட்டியின் இடையே மழை பெய்ததன் காரணமாக 19 ஓவர்களில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை எதிர்த்து விளையாடிய குஜராத் அணி சரியாக 19 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.
குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 43 ரன்களையும், ஜாஸ் பட்லர் 30 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : இந்த போட்டியில் பவர்பிளேவிற்கு பிறகு நாங்கள் இலக்கை நோக்கி வேகமாக செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால் மழை பெய்து போட்டியை டெஸ்ட் போட்டி போன்று கொண்டு சென்றது. பவர் பிளேவிற்கு பிறகு அதிரடியாக ஆடலாம் என்று நாங்கள் நினைத்தபோது மைதானம் ஸ்லோவானது அதேபோன்று மழையும் வந்தது. அதனால் மழைக்குப் பிறகு இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது.
இதையும் படிங்க : பாகிஸ்தானுடன் எந்த போட்டியிலும் விளையாடக்கூடாது.. இருந்தாலும் அந்த முடிவை அவங்கதான் எடுக்கனும் – கவுதம் கம்பீர்
இருந்தாலும் சரியான நேரத்தில் எங்களுக்கு முமென்ட்டத்தை திருப்ப ஒரு வாய்ப்பு கிடைத்து. அதைவைத்து இறுதி வரை சென்று நாங்கள் கடைசி பந்தில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றிக்கு அணியில் உள்ள அனைவருமே பங்களித்துள்ளனர் என்பதில் மகிழ்ச்சி. இது போன்ற ஒரு வெற்றி கிடைப்பது உண்மையிலேயே சிறப்பான ஒன்று என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.