- Advertisement -
ஐ.பி.எல்

1 ரன் வித்தியாசத்தில் வெற்றி.. கடைசி பந்தில் போட்ட பிளான்.. வெற்றிக்கு பிறகு – சுப்மன் கில் மகிழ்ச்சி

இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி :

டெல்லி அணிக்கெதிரான வெற்றி குறித்து : சுப்மன் கில் மகிழ்ச்சி

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 70 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 55 ரன்களையும் குவித்தனர். பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களை குவித்ததால் 1 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த போட்டியில் த்ரில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 92 ரன்களையும், டேவிட் மில்லர் 41 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : உண்மையிலேயே இந்த தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடி முதல் வெற்றியை இப்போது பதிவு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் தோற்ற இரண்டு போட்டிகளுமே கடைசி ஓவர் வரை சென்றது.

இம்முறை வெற்றி கோட்டை தாண்டியதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் கடைசி பந்தில் மில்லர் விளையாடிக் கொண்டிருந்ததால் அவருக்கு எதிராக ஒரு திட்டத்தை நாங்கள் தீட்டினோம். ஒன்று யார்க்கர் வீசுவது அல்லது ஸ்லோவர் பந்தை வீசுவது என்று முடிவு செய்தோம். ஆனால் கடைசியில் மைதானத்தின் தன்மையை கருத்தில் கொண்டு ஸ்லோவர் பந்தை வீசலாம் என்று பந்துவீச்சாளரிடம் கூறினேன். ஏனெனில் இந்த மைதானத்தில் ஸ்லோவர் பந்துகளை பிடித்து பவுண்டரி அடிப்பது மிகவும் கடினம்.

- Advertisement -

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷியை தட்டித்தூக்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி – விவரம் இதோ

எனவே அந்த வகையில் ஸ்லோவர் பந்தினை வீச சொன்னேன். இந்த போட்டியில் பீல்டிங்கில் நாங்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோன்று இந்த மைதானத்தில் 210 ரன்கள் என்பது வெற்றிக்கு சரியான ரன்கள் என்றும் நினைத்து விளையாடியதாக சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -