- Advertisement -
ஐ.பி.எல்

பிளே ஆப் சுற்றுக்கு முன்னாடி நாங்க இதை செய்ததில் மகிழ்ச்சி.. குஜராத் கேப்டன் – சுப்மன் கில் மகிழ்ச்சி

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 64-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து வலுவான நிலையில் உள்ளது.

சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பிறகு பேசிய : சுப்மன் கில்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய சி.எஸ்.கே அணி 13.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு சுருண்டால் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : இந்த வெற்றியின் மூலம் எங்களுக்கு நல்ல முமென்ட்டம் கிடைத்துள்ளது. பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கு முன்னால் கிடைத்துள்ள இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை நாங்கள் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளோம்.

ஏற்கனவே இந்த தொடரில் சில போட்டிகளை மிக நெருக்கமாக சென்று தவற விட்டோம். ஆனால் இந்த தொடரின் பிற்பாடுகள் தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக உணர்கிறேன். இந்த போட்டியை பொருத்தவரை என்னுடைய பேட்டிங் எனக்கு தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும்போது அது ஃபீல்டிங்கிலும் கூடுதல் உத்வேகத்தை அளிக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த மாதிரி மேட்ச்ல ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம்.. தோல்விக்கு பின்னர் – ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படை

முதல் 12 ஆட்டங்களின் முடிவில் நாங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்த வேளையில் தற்போது முதல் இரண்டு இடங்களுக்குள் இருந்தால் நல்லது என்று முடித்துள்ளோம். குஜராத் அணியின் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது. எங்களை ஊக்குவிக்கும் ரசிகர்களுக்கு நன்றி என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -