- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எல்லாம் என் விதி.. டி20 உலககோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மவுனம் கலைத்த – கேப்டன் கில்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நாளை ஜனவரி 11-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பல்வேறு கேள்விகளுக்கு தனது வெளிப்படையான பதில்களை அளித்துள்ளார். அந்த வகையில் சுப்மன் கில் அளித்த இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

எல்லாம் என்னோட விதிப்படியே நடைபெறுகிறது : சுப்மன் கில்

அதிலும் குறிப்பாக 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சுப்மன் கில் அளித்த பதில் பெரியளவில் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது டி20 போட்டிகளில் கம்பேக் கொடுத்த சுப்மன் கில் துவக்க வீரராகவும், துணை கேப்டனாகவும் விளையாடியிருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரே 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரின் துணை கேப்டனாகவும், துவக்க வீரராகவும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக சுப்மன் கில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் டி20 போட்டிகளுக்கான துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் 2026 டி20 உலககோப்பை தொடரில் தான் இடம்பெறாதது குறித்து தனது கருத்தினை அளித்திருந்த சுப்மன் கில் கூறுகையில் : நான் தேர்வுக்குழுவினரின் முடிவை மிகவும் மதிக்கிறேன். அவர்கள் டி உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்ற என்ன தேவையோ அந்த வகையிலேயே அணியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் அறிவிக்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பது என்னுடைய விதியில் எழுதப்பட்டுள்ளது. அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் ஒரு வீரராக நான் என்னுடைய நாட்டுக்காக சிறந்த பங்களிப்பை வழங்க தொடர்ந்து உழைக்க காத்திருக்கிறேன்.

இதையும் படிங்க : கே.எல் ராகுல் இல்லை.. 3 ஆல்ரவுண்டர்களுக்கு இடம்.. இர்பான் பதான் தேர்வுசெய்த இந்திய அணி – லிஸ்ட் இதோ

எனவே என்னுடைய உழைப்பால் மீண்டும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் பட்சத்தில் நிச்சயம் டி20 போட்டிகளிலும் பலமான கம்பேக் கொடுப்பேன் என்று சுப்மன் கில் கூறினார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை ஜனவரி 11-ஆம் தேதி வடோதராவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -