பிளான் பண்ணி எதுவும் பண்ணல.. ரஷீத் கானுக்கு 4 ஓவர்களை வழங்காதது ஏன்? – சுப்மன் கில் விளக்கம்

Gill and Rashid
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

ரஷீத் கானுக்கு ஓவரை வழங்காதது ஏன்? : சுப்மன் கில் விளக்கம்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்ட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை 196 ரன்கள் இழக்க 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மும்பை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது :

- Advertisement -

குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை மட்டுமே குவித்ததால் குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் 2 ஓவர்களை மட்டுமே வீசி 10 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

ஆனாலும் அவர் எஞ்சியிருந்த இரண்டு ஓவர்களை இந்த போட்டியில் வீசவில்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான ரஷீத் கான் இதுவரை 123 போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் நேற்று மட்டும்தான் அவர் விளையாடிய ஐ.பி.எல் போட்டியில் முழுவதுமாக 4 ஓவர்களை வீசாமல் வெளியேறியிருந்தார். இந்த சம்பவம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கானை இப்படி நான்கு ஓவர்கள் முழுவதுமாக பயன்படுத்தாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த கேள்விக்கு போட்டியின் முடிவிலேயே பதிலளித்திருந்த குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : உண்மையிலேயே அவர் இன்றைய போட்டியில் நான்கு ஓவர்களை வீசாமல் இருப்பது இதுவே முதல்முறை என்பது எனக்கு தெரியாது.

இதையும் படிங்க : இவ்ளோ பெரிய பேட்ஸ்மேன்.. ஆனா 18 வருஷமா எதுவுமே பண்ணல.. ரோஹித் சர்மாவை விமர்சித்த – விரேந்தர் சேவாக்

ஆனால் நான் இந்த போட்டியில் அவரை இறுதி கட்டத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தான் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியின் சிறப்பாக பந்து வீசியதால் பிரசித் கிருஷ்ணாவிற்கு நான் கடைசி கட்டத்தில் ஓவர்களை கொடுத்தேன். மற்றபடி அவருக்கு ஓவரை வழங்கக்கூடாது என்ற திட்டம் எல்லாம் என்னிடம் இல்லை என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement