இவ்ளோ பெரிய பேட்ஸ்மேன்.. ஆனா 18 வருஷமா எதுவுமே பண்ணல.. ரோஹித் சர்மாவை விமர்சித்த – விரேந்தர் சேவாக்

Sehwag and Rohit
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா அந்த அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை பெற்று தந்துள்ளார். அதிரடியான துவக்க வீரரான இவர் கடந்த பல ஆண்டுகளாகவே மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து வந்த வேளையில் கடந்த ஆண்டு அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது முழுநேர பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

ரோஹித் சர்மாவை விமர்சித்த ரோஹித் சர்மா :

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக கேப்டனாக திகழ்ந்துவரும் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான துவக்கத்தை அளித்து வரும் வேளையில் அவர் ஐபிஎல் தொடரில் தான் நினைத்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் அவரை தற்போது விமர்சித்து பேசியுள்ளார். அவரது இந்த கருத்து அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ரோஹித் சர்மா குறித்து விரேந்திர சேவாக் கூறியதாவது : ரோகித் சர்மாவின் ஆட்டத்திற்கு நானும் ஒரு ரசிகன் தான். ஆனால் ஐபிஎல் தொடரை பொருத்தவரை அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் இதுவரை நடந்த 18 சீசன்களில் அவர் ஒரு முறை கூட ஒரு சீசனில் 600-700 ரன்களை அடித்ததே கிடையாது.

18 வருடங்களாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வேளையில் ஒரு சீசனில் கூட பெரிய அளவில் ரன் குவிக்காதது ஏன்? இன்னும் அவர் எதிர்பார்த்த அந்த ஒரு சீசன் வரவில்லையா? இவ்வளவு பெரிய வீரராக இருந்தும் இப்படி பெரிய ரன்களை ரோகித் சர்மா குவிக்காதது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஐ.பி.எல் தொடரில் ஒருமுறை கூட ரோகித் சர்மா 600 ரன்களை கடந்ததில்லை என்று நினைக்கும் போது இனியும் அவர் அந்த ஆட்டத்தை வெளிப்படுத்த மாட்டார் என்றே நினைக்கிறேன் என்று சேவாக் கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதை வைத்து பார்க்கும் போது மும்பை அணி தற்போதைய தடுமாற்றத்திற்கு ரோஹித் சர்மா தான் காரணம் என்பது போல சேவாக் விமர்சித்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றார். ஆனாலும் கடந்த சீசனலும் சரி இந்த சீசனிலும் சரி ரோகித் சர்மா பெரிய துவக்கத்தை அளிக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுவதால் மும்பை இந்தியன்ஸ் அணி சரிவை சந்தித்து வருவது உண்மைதான் என்று சிலர் அவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : ஜெய் ஷா பவரா? மும்பையை சாய்க்க குஜராத் குறுக்கு வழியில் சென்றதை உளறிய கில்.. பிளெமிங் பரிதாபம்

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் வேளையில் அவர் அதிரடியாக விளையாடினால் மட்டுமே அந்த அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்றும் சிலர் கருத்துகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement