
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
அந்த வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடி வரும் நிதீஷ்குமார் ரெட்டியின் வாய்ப்பு குறித்தும் வெளிப்படையாக பல கருத்துக்களை பேசியிருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நிதிஷ் குமார் ரெட்டி உண்மையிலேயே ஒரு சிறப்பான ஆல்ரவுண்டருக்கான அனைத்து தகுதியையும் வைத்துள்ளார்.
அவருடைய திறமையை ஏற்கனவே பார்த்து விட்டோம். அவர்மீது எங்களுக்கும் சரி, நிர்வாகத்திற்கும் சரி நல்ல நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் அவர் மிகப்பெரிய ஆல்ரவுண்டராக மாறும் திறனை கொண்டுள்ளார். நமது அணியில் மூன்றாவது மற்றும் நான்காவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தேவை இருக்கிறது.
எனவே இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக நிதீஷ்குமார் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவருக்கு போதுமான வாய்ப்பினையும், நேரத்தையும் நாங்கள் கொடுக்கும் போது அவரால் இன்னும் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி முன்னேற்றத்தை காண முடியும்.
குறிப்பாக இந்திய மைதானங்களில் அவருக்கு அதிகளவில் விளையாட வைத்தால் நிச்சயம் அவரால் வெளிநாட்டு மண்ணிலும் பிரகாசிக்க முடியும். பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை டாப் ஆர்டராக இருந்தாலும் சரி, பின் வரிசையில் இருந்தாலும் சரி அவரால் ரன் குவிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் சுப்மன் கில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2772 ரன்ஸ்..டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்திய நாயகனாக கில் சாதனை.. ரோஹித், ரிஷப் பண்ட்டை முந்தி அசத்தல்
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சதமடித்த நிதீஷ் ரெட்டி, இங்கிலாந்து நாட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டிருந்தார். எனவே நிச்சயம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் இடம் பிடிப்பது உறுதி என்றே கூறலாம்.