பேட்டிங்ல எந்த தப்பும் இல்ல.. தோல்விக்கு இந்த சொதப்பல் மட்டும் தான் காரணம் – சுப்மன் கில் வருத்தம்

Shubman Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

கே.கே.ஆர் அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய : சுப்மன் கில்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களை குவித்தது. பின்னர் 248 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை மட்டுமே குவித்ததால் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது : இந்த மைதானத்தை பார்க்கையில் 200 முதல் 210 ரன்கள் வரை அடித்திருந்தால் நிச்சயம் அதை சேஸ் செய்திருக்க முடியும். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம்.

மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் ஒரு சில பந்துகள் நின்று வந்தன. அதனால் நாங்கள் நினைத்த வேகத்தில் செல்ல முடியவில்லை. பீல்டிங்கில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். ஏனெனில் மூன்று எளிதான கேட்ச்களை நாங்கள் இந்த போட்டியில் தவறவிட்டோம். அதன் காரணமாகவே அவர்கள் பெரிய ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : மோசமான சாதனையுடன் கே.கே.ஆர் அணிக்கெதிராக ரன்களை வாரி வழங்கிய குஜராத் டைட்டன்ஸ் – விவரம் இதோ

பேட்டிங்கை பொறுத்த வரை இந்த போட்டியில் நாங்கள் எந்த ஒரு தவறும் செய்ததாக நினைக்கவில்லை. கூடுதல் ரன்களை மோசமான பீல்டிங் மூலமாக விட்டுக் கொடுத்ததாலே தோல்வியை சந்தித்ததாக நினைக்கிறேன். நிச்சயம் அடுத்த போட்டியில் மிகச் சிறப்பாக திரும்புவோம் என்றும் சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement