இப்படி 89 ரன்ஸ் மட்டுமே அடிச்சி இவ்ளோ கேவலமா தோக்க இதுதான் காரணம் – சுப்மன் கில் வருத்தம்

Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் போட்டியானது நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணியானது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 17.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 89 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 90 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : எங்களுடைய பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இருந்தாலும் இந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுக்க கொடுக்கும் மனநிலையுடன் இருக்கிறோம். இந்த மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக தான் இருந்தது.

- Advertisement -

ஆனாலும் எங்களது விக்கெட்டுகளை கவனித்திருந்தால் நாங்கள் மோசமான ஷாட்டுகளை விளையாடி இருக்கிறோம் என்பது புரிகிறது. அதோடு 89 ரன்களை வைத்துக்கொண்டு எதிரணியை நிறுத்துவது என்பதெல்லாம் பெரிய விடயம். யாராவது ஒருவர் இரண்டு ஹாட்ரிக்கை எடுத்தால் மட்டுமே எதிரணியை வீழ்த்த முடியும்.

இதையும் படிங்க : “நீ எப்போதும் என்னுடன் தான் இருக்கிறாய்” தனது மகனுக்காக ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட – ஷிகர் தவான்

முதல் பாதியிலேயே இப்படி ஒரு தோல்வி வந்துள்ளது. இந்த தொடரில் இதுவரை நாங்கள் மூன்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். இன்னும் அடுத்து வரும் ஏழு போட்டியில் 5-6 வெற்றிகளை நாங்கள் கடந்த ஆண்டு போன்று பெற்று பிளே ஆப் சுற்றுக்கு செல்வோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement