சி.எஸ்.கே அணியிடம் நாங்க தோக்க முழுக்க முழுக்க இதுமட்டும் தான் காரணம் – சுப்மன் கில் வருத்தம்

Shubman Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

சி.எஸ்.கே அணியிடம் நாங்க தோக்க இதுவே காரணம் : சுப்மன் கில் வருத்தம்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக டேவால்டு பிரேவிஸ் 57 ரன்களையும், டேவான் கான்வே 52 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 41 ரன்களையும், அர்ஷத் கான் 20 ரன்களையும் குவித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் பவர்பிளே ஓவர்களிலேயே போட்டியை விட்டு வெளியே சென்று விட்டோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் பவர்பிளே ஓவர்களிலேயே சிஎஸ்கே வீரர்கள் அதிகளவு ரன்களை குவித்து விட்டதால் இலக்கு பெரியதாக அமைந்தது.

- Advertisement -

230 ரன்கள் போன்ற பெரிய இலக்கினை துரத்தும் போது நிச்சயம் அழுத்தம் அதிகளவில் இருக்கும். ஏற்கனவே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறி விட்டதால் அவர்களது பேட்ஸ்மேன்கள் எந்தவொரு அழுத்தமும் இன்றி சுதந்திரமாக விளையாடினர். ஆனால் நாங்கள் இந்த போட்டி முழுவதுமே அழுத்தத்திற்கு இடையில் சிக்கிக்கொண்டோம்.

இதையும் படிங்க : 83 ரன்ஸ்.. வென்றும் சிஎஸ்கே வரலாறு காணாத அவமான சாதனை.. குஜராத்திடம் பெரிய சாதனை வெற்றி

அப்படி அழுத்தத்தின் மத்தியில் விளையாடியதால் தான் பெரியளவில் எங்களுடைய சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதுதான் தோல்விக்கு முழுக்க முழுக்க காரணம் என்று நினைக்கிறேன். கடைசி இரண்டு போட்டிகளாக எங்களது ஆட்டம் நினைத்த அளவில் சிறப்பாக இல்லை. இருந்தாலும் அடுத்ததாக வரும் குவாலிபயர் போட்டியில் அசத்த காத்திருக்கிறோம் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement